New Page 1
செய்த நெஞ்சாறல் ஆறுவது
ஆளவந்தார் ஸ்ரீபாதத்து ஏறப்போனால் அன்றோ’ என்ற வார்த்தையை நினைப்பது. பொன்னுலகு ஆளீரோ
புவனிமுழுது ஆளீரோ - 1ஒருவில் எருதுகளைப்போன்று இரண்டு உலகங்களும் தன்னைச் சேர்ப்பார்க்கு
என்று இருக்கிறாள். ஆளீரோ - 2தன்னுடைமை ஒருவர் பண்ணிக்கொடுக்க வேண்டாதிருக்கிறபடி.
3“என்னாலே இவனுக்கு அபயம் கொடுக்கப்பட்டது” என்றாரே அன்றோ பெருமாள். அப்படியே
அவற்றுக்கும் ‘தூது போக’ என்று முகங்காட்டினபோதே கொடுத்தற்றது. 4அவன் காரியம்செய்கிற
இவற்றுக்கு அவனை அறிவித்துக் கொடுக்கவேண்டாவே அன்றோ. 5இவள் தானும் அவன்
காரியம் அன்றோ செய்கிறது. 6இவை போகவே தான் உளளாம்; தான் உளளாகவே
கொடுக்கும் சக்தி இருந்தும்,
அருளாளப்பெருமாள் எம்பெருமானார்க்கு
அதனைக் கொடாமல், அவர் படும் துன்பத்தை அவர்
கண்டுகொண்டிருந்தமையால்
வந்த மனோதுக்கம் என்றபடி. தம்முடைய
ஆசாரியரான எம்பெருமானார் இங்கே எழுந்தருளியிருப்பதனால்,
‘ஆளவந்தார் ஸ்ரீ பாதத்து ஏறப்போனால்’ என்கிறார். ஆளவந்தார் ஸ்ரீ
பாதத்து ஏறப்போதலாவது,
பரமபதத்தை அடைதல்.
1. இத் திருப்பாசுர
வியாக்கியானத்தின் தொடக்கத்தில் ‘ஈசுவரனுடைய
விபூதியானது’ என்று தொடங்கி அருளிச்செய்த
வாக்கியத்தை விவரணம்
செய்கிறார் ‘ஒரு வில் எருதுகளைப்போன்று’ என்று தொடங்கி. என்றது,
வில்லும் எருதுகளும் சீதாபிராட்டிக்கும் நப்பின்னைப்பிராட்டிக்கும்
கன்யாசுல்கமானாற்போலே,
இரண்டு உலகங்களும் சேர்ப்பார்க்குச் சுல்கம்
என்று இருக்கிறாள் என்றபடி. சுல்கம் - பணமுடிப்பு.
2. ‘ஆளீரோ’ என்கைக்கு,
எங்களுக்கு நீ கொடுத்தாயோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘தன்னுடைமை’ என்று தொடங்கி.
3. அதற்குக் காரணம் யாது?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘என்னாலே’ என்று தொடங்கி. “தத்தம் அஸ்ய அபயம் மயா”
என்பது,
ஸ்ரீ ராமா. யுத். 18 : 34. என்றது, “மற்றொரு பொருள் உளதென்னின்,
மாறிலாக் கொற்றவ!
சரண்” என்ற போதே பெருமாளால்
கொடுக்கப்பட்டது என்றபடி.
4. ‘இரண்டு விபூதிகளும் ஒரு
மிதுனத்துக்கு அடிமை’ என்று முன்பு கூறிய
இரண்டாவது சமாதானத்தில், ‘அவனுக்கும் அடிமை’ என்பது
போதருகின்றதன்றோ? அங்ஙனமிருக்க, அவனுக்குத் தெரிவிக்காமல்
கொடுக்கலாமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘அவன்
காரியம்’ என்று தொடங்கி.
5. நன்று; தன் காரியமாக
அன்றோ தூதுபோகச் சொல்வது; அவன் காரியமோ
இது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இவள் தானும்’ என்று
தொடங்கி.
6. அது எப்படி?
என்ன, ‘இவை தூது’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
|