உலகத
உலகத்தோடு கூடிய எம்பெருமான்
உளனாம். 1இனி, இவள் தன் படுக்கைப் பற்றை அன்றோ கொடுக்கிறதும். ஆளீரோ-உங்கள்
காரியமே செய்ய ஒண்ணாது: என் காரியமும் செய்யவேணும். இவள் காரியம் செய்கையாவது, இவற்றை
ஆளுகை அன்றோ. ‘இவள் தான் உபயவிபூதியையும் கொடாநின்றாளாகில், அவன் வந்தால் தானும் அவனும்
எங்கே இருப்பது?’ என்ன, ‘இக் குருவி காட்டின இடத்தே’ என்று அனந்தாழ்வான் அருளிச்செய்வர்.
பொன்னுலகு ஆளீரோ
புவனிமுழுது ஆளீரோ - 2கைப்பட்டதனைக் கொடுத்தன்றோ மற்றொன்று தேடிக்கொடுப்பது.
3தனக்கு ஆக்கின அடைவிலே கொடுக்கிறாள். 4நித்திய விபூதியைக்
கொடுத்தே அன்றோ, லீலாவிபூதியைக் கொடுத்தது; 5“அயர்வறும் அமரர்கள் அதிபதி”
என்ற பின்பேயன்றோ, “இலன் அது உடையன் இது” என்று லீலாவிபூதியோகம் சொல்லிற்று. 6இங்கே
இருந்தாலும் ஞானம்பிறந்தால் அணித்தாகத் தோற்றுவது அவ்விடம் அன்றோ: 6“அக்கரை
என்னும் அனத்தக்கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக் கரைஏறி இளைத்து” என்று அது இக்கரையாகவும்,
1. அவனுக்குத் தெரிவிக்காமல்
கொடுக்கலாமோ? என்பதற்கே வேறும்
ஒருவகையில் விடை அருளிச்செய்கிறார் ‘இனி, இவள்தன்’ என்று
தொடங்கி. “என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே” (திருவாய்.
1. 9 : 4.) என்றதனைத் திருவுள்ளம்பற்றிப்
‘படுக்கைப்பற்று’ என்கிறார்.
படுக்கைப்பற்று - சீதனம்.
2. முதல் முன்னம் தான்
இருந்த உலகத்தைக் கொடாமல், முற்படப்
“பொன்னுலகாளீரோ” என்பான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘கைப்பட்டதனை’ என்று தொடங்கி.
3. ‘கைப்பட்டதனை’ என்று
மேலே கூறியதனை மூன்று வகையாக
விளக்குகிறார். முதல்வகை, ‘தனக்கு ஆக்கின’ என்று தொடங்கும்
வாக்கியம்.
4. தனக்கு ஆக்கின அடைவு
யாது? என்ன, ‘நித்திய விபூதியை’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
5. ‘அயர்வறும்’ என்பது, திருவாய்.
1. 1 : 1. ‘இலன் அது’ என்பது, 1. 1 : 3.
6. இரண்டாம்
வகையை அருளிச்செய்கிறார் ‘இங்கே இருந்தாலும்’ என்று
தொடங்கி. அவ்விடம் அணித்தாகத் தோற்றியதற்குப்
பிரமாணம்
காட்டுகிறார் ‘அக்கரை’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திரு.
5. 3 : 7. அது
- பரமபதம்.
|