இட
இட்டு அழைக்கும்படி கடக்க
இராதே நீங்கள் முன்னம் கிட்ட நின்று முகங்காட்டப் பெறுவதே! 1உங்கள்படி இருந்தபடி
கண்டேனுக்கு எல்லாச் செல்வங்களையும் எனக்குத் தந்து தூது போம்படியாய் இருந்ததே! 2‘அவனுக்குக்
குணங்களில் ஏற்றம் ஆஸ்ரயத்தாலே’ என்று இருந்தோம்; அது உங்கள் பக்கலிலே அன்றோ என்கிறாள்.
3“பிரதாபம்
என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும், மற்றும்
பலவான குணங்களும் உன்னிடத்தில்தான் விளங்குகின்றன; இதில்ஐயமில்லை” என்னப்படுமவனும்
புறம்பானான், உங்களைப்பார்க்க. 4உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே
‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ! 5உங்கள் தரத்துக்கு
அது ஓர் அறுகும் தாளிப்பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளையமுதனார். 6உங்களுக்கு
நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ. 7பாண்டவர்களுக்குத்
தூதுபோன கிருஷ்ணன்
1. ‘கொடை’ என்ற பொருளை
அருளிச்செய்கிறார் ‘உங்கள்படி’ என்று
தொடங்கி.
2. ‘குணங்களின் தொகுதி’
என்ற பொருளை அருளிச்செய்யத்
திருவுள்ளம்பற்றி “நல்” என்ற அடைமொழி, ஈசுவரகுணத்தையும், திருவடி
குணத்தையும் பிரிக்கிறது என்கிறார் ‘அவனுக்கு’ என்று தொடங்கியும்,
‘பிரதாபம் என்ன’ என்று தொடங்கியும்.
‘ஆஸ்ரயத்தாலே’ என்றது,
சர்வேசுவரன் ஆஸ்ரயம் ஆகையாலே என்றபடி.
3. “தேஜ: க்ஷமா த்யுதி:
ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
ஏதேச அந்யேச பஹவோ குணா:
த்வயிஏவ ஸோபநா:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 28.
இராவணனைக் கொன்றபின் வந்து சேர்ந்த
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. என்னப்படுமவன்
- திருவடி.
அறிவு மீதே உருவீதே ஆற்ற
லீதே அரும்புலத்தின்
செறிவுமீதே செயலீதே தேற்ற
மீதே தேற்றத்தின்
நெறியு மீதே நினைவீதே
நீதி யீதே நினக்கென்றால்
வெறிய ரன்றோ குணங்களால்
விரிஞ்சன் முதலா மேலானோர்.
என்பது, கம்பராமாயணம், உருக்காட்டுப்பட.
111.
4. “நலம்” என்பதற்கு,
கிருபைபரமாக மேலே அருளிச்செய்த அர்த்தத்தை
விவரணம் செய்கிறார் ‘உங்கள் நீர்மை’ என்று தொடங்கி.
5. ‘இரண்டு உலகங்களையும்
ஆளுங்கோள்’ என்றது, நல்லதன்றோ, நலிவோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘உங்கள்
தரத்துக்கு’ என்று
தொடங்கி. அறுகு - அறுகம்புல். தாளிப்பூ - நீத்தாளிப்பூ.
6. மேலே கூறியதனை விவரணம்
செய்கிறார் ‘உங்களுக்கு’ என்று தொடங்கி.
7. “நலம்” என்பதற்கு, ‘சிநேகம்’ என்ற பொருளை அருளிச்செய்கிறார்
‘பாண்டவர்களுக்கு’ என்று தொடங்கி.
|