இரண
இரண்டு திருவடிகளையும்
நெருங்கப் பிடித்துக்கொண்டு பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்தியவிரதரான
பெருமாளைப் பார்த்தும் சொன்னார்” என்கிறபடியே, புருஷகாரத்திற்கு வழியாக எல்லாராலும் இரக்கப்படும்
யான் இரந்தேன் என்னுதல். இரந்தேன் - நியமிக்கிறேன் அல்லேன், இரக்கின்றேன். இரப்பார்
காரியம் செய்தறவேணும் என்னும் நினைவாலே ‘இரந்தேன்’ என்கிறாள். இரந்தேன்
என்று அவற்றின் நெஞ்சிலே புண்படுத்துகிறாள். புன்னைமேல் உறை பூங்குயில்காள் - வைமாநிகரைப்
போலே மனிதர்களுடைய வாசனை நடையாடாதபடி உயர்ந்த இடத்தில் வாழ்கின்ற, கலவியினாலே
விளங்குகின்ற குயில்காள்! உங்களைப் போகவிடுதல் தரும ஹாநியாய் இருக்கின்றது; ஆகிலும், என்செல்லாமையாலே
செய்கின்றேன் என்பாள் ‘உறை’ என்கிறாள். போற்றி - 1பெருமாளும் பிராட்டியுமாகக்
காட்டிற்கு ஏகாந்த போகத்துக்குப் போகாநிற்கச்செய்தே நடுவே இராவணன் வந்தாற்போலே, உங்கள்
போகத்துக்குப் பிரிவு உண்டாக்க நான் தோற்றினேன் போலே இருந்தது. இத்தால் ஒரு வியசனம் இன்றிக்கே
ஒழிந்திடுக உங்கள் போகத்துக்கு என்கிறாள் என்றபடி. 2பிள்ளையமுதனார், திருவிருத்தவரைமார்வனை,
‘புன்னைமேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச்செய்தது என்?’ என்ன, ‘தன் துன்பஒலி
அவற்றின் செவியிலே படும்படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச்செய்தார்’ என்ன, ‘நெய்தல்
நிலத்திலே 3புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர்பாடே வந்து, ‘இங்ஙனே
1. “போற்றி” என்பதற்கு,
வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார்
‘பெருமாளும்’ என்று தொடங்கி.
2. ‘உயர
“போற்றி” என்கிறாள்’ என்று, தாம் மேலே அருளிச் செய்ததற்குச்
சம்வாதம் காட்டுகிறார்
‘பிள்ளையமுதனார்’ என்று தொடங்கி. என்றது,
“போற்றி” என்றது, எடுத்தல் ஒசையாகையாலே,
“வானார் வண்கமுகு”,
“சேண்சினை ஓங்குமரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள
புன்னைகளும் உயர்ந்து
ஓங்கி இருக்கும் என்கிறபடி.
3. “பருவத் தேனசைஇப்
பல்பறைத் தொழுதி
உரவத் திரைபொருத
திணிமண லடைகரை
நனைந்த புன்னை
மாச்சினை”
என்பது, குறுந்தொகை,
175.
|