இ
இருக்கையாலே; 1இவனுக்குப்
பணி குறையை அறிவிக்கையே அன்றோ, மேல் உள்ளன எல்லாம் அவன் பணி அன்றோ. என் நிலைமை
உரைத்துப் பொன்னுலகு ஆளீரோ - 2துயர ஒலி கேளாமல் ஜீவிக்கப் பாருங்கோள்!
3சக்கரவர்த்தி பெருமாளை முடிசூட்டப் பாரித்தபோது, இருடிகள் இராக்கதர்களாலே நோவுபடுகையாலே,
இராச்சியம் திருவுள்ளத்தில் பொருந்தாமை புறப்பட்டுப்போனார் அன்றோ; அப்படியே, பெண்கொலையும்
துயர ஒலியும் கேட்டால் இவை உபய விபூதியையும் ஆளமாட்டா என்று இருக்கிறாள்.
(1)
631
மையமர் வாள்நெடுங்கண்
மங்கைமார் முன்புஎன் கைஇருந்து
நெய்யமர் இன்னடிசில்
நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்துஎன்
கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல்
சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடிவந்தே.
பொ-ரை :-
கிளிகாள்! திருக்கையிலே பொருந்தியிருக்கின்ற
சக்கரத்தையும் கோவைக்கனி போன்ற திருவாயினையுமுடைய என் பெருமானைக் கண்டு, திருமேனியிலே
அணையவேண்டும்படியான காதலைச் சொல்லி விரைந்து ஓடி வந்து, மைபொருந்தியிருக்கிற வாள்போன்ற
நீண்ட கண்களையுடைய பெண்களுக்கு முன்னே என் கையிலே தங்கியிருந்து, நெய்யோடுகூடிய இனிய உணவினைப்
பாலோடுகூட நாள்தோறும் இருந்து உண்ணவேண்டும்.
வி-கு :-
கிளிகாள்! பெருமானைக் கண்டு காதலைச் சொல்லி ஓடி வந்து என்கை இருந்து அடிசிலைப் பாலோடு மேவீர்
என்க. ‘மேவீரோ’ என்பதிலுள்ள ஓகாரம் அசைநிலை.
1. ஆனால், செய்ய அடுப்பது
யாது? என்ன, அதற்குச் சுவாபதேசப்
பொருளில் விடை அருளிச்செய்கிறார் ‘இவனுக்கு’ என்று தொடங்கி.
2. “என் நிலைமை உரைத்துப்
பொன்னுலகு ஆளீரோ” என்று, காரியம்
செய்து சமைந்தால் கைக்கூலி கொடுப்பாரைப்போலே கூலி
கொடுக்கிறாளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘துயரஒலி
கேளாமல்’ என்று தொடங்கி.
3. துயர ஒலி
கேட்டால் ஆளமாட்டாதோ? என்ன, ஆளமாட்டாமையைத்
திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார்
‘சக்கரவர்த்தி’ என்று தொடங்கி.
|