முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
364

அப

அப்படி அன்றே இங்கு; 1உடம்பிலே அணைந்து பிரிந்தார்க்கு உடம்பை அணைத்து அல்லது நிற்க ஒண்ணாதே அன்றோ. மெய் அமர்காதல் - 2‘தம்மைப்போலே பொய்யுமாய் நிலைநில்லாததுமான காதல் அன்று எங்களது என்று சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர். சத்தியமான காதல் என்றபடி. அன்றிக்கே, 3ஆத்மாவோடே ஒன்றுபட்டிருக்கின்ற காதல் என்றுமாம். மெய் என்று ஆத்மாவாய், ஆத்மாவோடே பொருந்தின காதல் என்றபடி. “மெய்ம்மையே மிக உணர்ந்து” என்கிற இடத்தில், மெய் என்றது, ஆத்மாவை அன்றோ சொல்லிற்று. சொல்லி - 4தந்தாமுக்கு இல்லாதவை பிறர்வாயிலே கேட்டறிய வேணுமித்தனை அன்றோ. 5தமக்கு உண்டாகில் இப்படித் தூதுவிடப் பார்த்து இராரே. 6காட்சிக்கு மேலே ஓர் ஏற்றம்போலே காணும் தன் நிலையை அவனுக்கு அறிவித்தல்.

    கிளிகாள் விரைந்து ஓடி வந்து - 7பிராட்டியைக் கண்டு மீண்ட பின்பு முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தாற்போலேயும், பெருமாள் மீண்டு எழுந்தருளுகிறபோது திருவடி முன்னே வந்து ஸ்ரீபரதாழ்வானை உகப்பித்தாற்போலேயும், நீங்கள் முன்னே வர

 

  யைக் காட்டிலும் ஆழ்வார் நாயகிக்குண்டான வேற்றுமையை
  அருளிச்செய்கிறார் ‘அப்படி அன்றே இங்கு’ என்று. ‘அப்படி அன்றே’
  என்றது, அவன் சத்தையாலே ஜீவித்தல், குணஞானத்தாலே ஜீவித்தல்
  செய்யும்படி அன்றே இங்கு என்றபடி.

1. திருமேனியோடு அணைந்தே சத்தை தரித்திருக்க வேண்டும்படி
  இருக்கைக்கு அடி யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘உடம்பிலே’ என்று தொடங்கி.

2. “மெய்யமர் காதல்” என்பதற்கு, மூன்றாவதாக வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார் ‘தம்மைப்போலே’ என்று தொடங்கி. தம்மைப்போலே
  - தம்முடைய காதலைப்போலே.

3. நான்காவதாக வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார் ‘ஆத்மாவோடே’
  என்று தொடங்கி. ‘மெய்மையே’ இது, திருமாலை, 38. ‘மெய்மையை’
  என்பதும் பாடம்.

4. “என்காதல் சொல்லி” என்கையாலே, ‘அவர்க்கு அது இல்லை’ என்பது
  போதருமாதலின் அதனை அருளிச்செய்கிறார் ‘தந்தாமுக்கு’ என்று
  தொடங்கி.

5. அவர்க்கு இல்லை என்னுமதற்குக் காரணம் காட்டுகிறார் ‘தமக்கு
  உண்டாகில்’ என்று தொடங்கி.

6. “என்காதல் சொல்லி” என்பதற்கு, வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார்
  ‘காட்சிக்கு மேலே’ என்று தொடங்கி. என்றது, “கண்டு” என்ற
  காட்சிக்குமேலே, அவனோடே பேசுதலும் இவற்றுக்கு ஏற்றம் என்றபடி.

7. விரைந்தோடி வருவதற்குப் பிரயோஜனம் அருளிச்செய்கிறார்
  ‘பிராட்டியைக் கண்டு’ என்று தொடங்கி.