முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
366

இன

இனித்தான், சிஷ்யனானவன் ஆசாரியனுக்குத் தொண்டுசெய்யலாவது, அவன் சரீரத்தோடு இருக்கிற நாள்களிலே அன்றோ; பின்பு உள்ளன எல்லாம் பகவானுடைய அனுபவத்திலே சேருமே அன்றோ இருவருக்கும். அவன் ‘எனக்கு’ என்னும் நாளிலே அன்றோ, இவன் ‘உனக்கு’ என்று கொடுக்கலாவது?

(2)

632.

        ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
        கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
        ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
        சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.


    பொ-ரை :-
சேர்ந்திருக்கின்ற வண்டுக்கூட்டங்களே! குருநாட்டினையுடைய பாண்டவர்களுக்காக, வெற்றிபொருந்திய குதிரைகள் பூட்டிய நீண்ட தேரினாலே சேனைகள் சாம்பலாகும்படி அழித்த கண்ணபிரான் அணிந்து கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயிலேயுள்ள தேனைப் புசித்த பரிசுத்தமான தேன் பொருந்திய வாய்களைக்கொண்டு, ஓடிவந்து என்கூந்தலின்மேல் உள்ள ஒளிபொருந்திய சிறந்த பூக்களில் ஊதுவீர்களாக.

    வி-கு :- வண்டு இனங்காள்! ஐவர்கட்காய்ப் படை நீறுஎழச் செற்ற பிரான் துளபம் உண்ட மது வாய்கள் கொண்டு ஓடி வந்து சூழல்மேல் மா மலர் ஊதீர் என்க, வாய்கள்கொண்டு-வாய்களால்.

    ஈடு :-
மூன்றாம்பாட்டு. 1சில வண்டுகளைக் குறித்து அவனுக்கு என் நிலையை அறிவித்து என் தலைமேலே பொருந்தி வாழுங்கோள் என்கிறாள்.

    ஓடி வந்து-கடுக வரவேணும். என் அளவு கண்டு போகிற நீங்கள், நான் உள்ளபோதே வந்து உதவவேணும். அன்றிக்கே, 2அவற்றை அநுபவிக்கையில் உண்டான விரைவாலே யாதல், சடக்கென வரவேணும் என்கிறாள் என்னுதல். என் குழல்மேல் - 3பேரளவுடையார் படும் ஈடுபாட்டினைக் கண்டு, தன் குழலின் வீறு

 

1. “வண்டினங்காள்! பிரான் சூடிய தண்துளபம் உண்ட தூ மது வாய்கள்
  கொண்டு ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதீர்” என்றதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. அவற்றை - அளகங்களை.


3. “என் குழல்மேல்” என்று, தன்குழலைத் தானே கொண்டாடலாமோ?
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பேரளவுடையார்’ என்று
  தொடங்கி. பேரளவுடையார் - சர்வேசுவரன், என்றது, “தோகை
  மாமயிலார்கள்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.