த
தான் அறிந்திருக்குமே.
‘சூடிய தண் துளபம் உண்ட தூ மதுவாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ
என்பான் என்? காரியம் செய்து சமைந்தால் கைக்கூலி கொடுப்பாரைப்போலே? என்னில், இவற்றுக்கு
இவள் குழலிலே 1விஷயம் உண்டாகவேணுமே. இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது;
இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது. என் குழல் மேல் - 2அவனுக்குத்
தூதுபோய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூதுபோனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.
3அங்கு மஹாராஜருடைய மதுவனம் அன்றோ அழிந்தது; இங்கு அவன் காவற்காட்டினை உங்களுக்குத்
தருகிறேன் என்கிறாள். அளகாடவி அன்றோ. 4தலையான பரிசில் அன்றோ இதுதான்.
5ததிமுகன் முதலாயினோர்களுடைய விலக்குகையும் இல்லை அன்றோ இங்கு. 6சாந்தனான
திருவடி அன்றோ “நான் உங்களுடைய பகைவர்களைத் தடுக்கிறேன்” என்றான். 7பிராட்டியைக்கண்டு
வந்தமை அறியாதிருக்கச்செய்தேயும் மதுவனம் அழிந்தமையைக் கண்டு, மஹாராஜருடைய வால் ருசியமூக
1. விஷயம் - தேன். ‘இத்தலையில்’
என்றது, சிலேடை.
2. “என்குழல்மேல் ஒளி மா
மலர் ஊதீரோ” என்றதனால், பவித்த பொருளை
அருளிச்செய்கிறார் ‘அவனுக்கு’ என்று தொடங்கி.
3. அந்த ஏற்றத்தை
அருளிச்செய்கிறார் ‘அங்கு’ என்று தொடங்கி. இங்கு,
கம்பராமாயணம் திருவடிதொழுத படலம்
12-முதல் 26-முடியவுள்ள
செய்யுள்களைக் காணல் தகும்.
4. ஏற்றத்தினை ரசோக்தியாக
அருளிச்செய்கிறார் ‘தலையான’ என்று
தொடங்கி. பரிசில் - உபகாரம்.
5. வேறும் ஒருவகையால் இதற்கு
உண்டான ஏற்றத்தினை அருளிச்செய்கிறார்
‘ததிமுகன்’ என்று தொடங்கி. ததிமுகன் - மதுவனத்தைக்
காவல்
புரிந்திருந்த காவலாளன்.
6. மதுவனத்தில் விலக்கினார்
உண்டோ? என்ன, ‘சாந்தனான’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது, மஹாராஜருடைய
காவற்காட்டினை உண்பதற்குத் தடை உண்டு; இங்கு அது இல்லை என்றபடி.
“அவ்யக்ரமநஸோ யூயம்
மது ஸேவத வாநரா:
அஹம் ஆவாரயிஷ்யாமி
யுஷ்மாகம் பரிபந்திந:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 62 : 2.
7. பிராசங்கிகமாக
(இடைப்பிறவரல்) அருளிச்செய்கிறார் ‘பிராட்டியை’
என்றது முதல் ‘பட்டர் அருளிச்செய்வர்’
என்றது முடிய.
|