முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
37

New Page 1

கொண்டு, பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேசுவரனை என்று பட்டர் அருளிச்செய்வர். மாற்றம் கொண்டருளீர்- ஒரு வார்த்தை கொண்டு வந்தருளவேண்டும். எப்படிப்பட்ட வார்த்தை கொண்டு வர எனின், என்நிலை இருந்தபடி கண்டீர்கோளே, இது தீர்வது ஒருவழி நீங்களே தேடிக்கொண்டு வந்து சொல்லுங்கோள். 1“காணப்பட்டாள் சீதை” என்றாற்போலே. மையல் தீர்வது ஒருவண்ணம் மாற்றம் கொண்டருளீர் - என்கிலேசம் தீர்வது ஒருபிரகாரம் வார்த்தைகொண்டு வந்தருளிச்செய்யவேண்டும். 2தூதுவிடுகிற தான் ஜனகராஜன் திருமகளாகவுமாம், விடப்படுகிறவை திர்யக்குகளையாகவுமாம், பகவத் விஷயத்தில் சேர்க்கின்றவர்களாயிருப்பாரை இங்ஙன் அல்லது சொல்லொண்ணாது காணும்.

(6)

559.

    ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
    செருஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
    கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
    செருஒண் சக்கரம் சங்குஅடையாளம் திருந்தக்கண்டே.

 

1. இது தீர்வது ஒரு வழி தேடிக்கொண்டு வந்து சொல்லுகையாவது ஏன்?
  என்ன, ‘காணப்பட்டாள்’ என்று தொடங்கி விடை அருளிச்செய்கிறார்.

 
“ஸ: அபிகம்யமஹா த்மாநம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம்
   ந்யவேதயத் அமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்வத:”

  என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 78.

  கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்;
  தெண்டிரை யலைகடல் இலங்கைத் தென்னகர்
  அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும்
  பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.

  என்பது, கம்பராமாயணம்.

2. ‘சொல்லீர்’ என்னாதே, “அருளீர்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘தூதுவிடுகிற’ என்று தொடங்கி. முதற்பத்து ஈட்டின் தமிழாக்கம், 148-ஆம்
  பக். பார்க்கத்தகும்.

3. பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
  விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
  திருவடியும் கையும் திருவாயும் செய்ய
  கரியவனைக்
காணாத கண்ணென்ன கண்ணே!
  கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!

  என்பது, சிலப்பதிகாரம்.