முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
372

New Page 1

பொருந்தும்படி வார்த்தை சொல்ல வல்ல வாயைக் கொண்டு. 1“காணப்பட்டாள் சீதை” என்றாற்போலே. என்னையும் மதுபானம் பண்ணுவித்து நீங்களும் மதுபானம் பண்ணுங்கோள்.

(3)

633.

    தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
    பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
    மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
     2
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.

   
பொ-ரை :- நான் வளர்க்கிற முல்லைகளின்மேலே தங்கியிருக்கின்ற தும்பிகளே! பூக்களிலேயுள்ள மதுவினை உண்ணுவதற்குச் சென்றால், பரிசுத்தமான இனிய வார்த்தைகளோடு சென்று, தீயவினைகளையுடைய என்னிடத்தில் பொய்யான கலவிகளைச்செய்து நீங்கிய, சிறந்த மதுவானது ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய்மாலையைத் தரித்த திருமுடியையுடைய நித்தியசூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானை நீங்கள் கண்டு, உமக்கு இதுவோ தக்கவாறு என்று கூறவேண்டும்.

    வி-கு :- தும்பிகாள்! நுங்கட்குச் செல்லில், வாய்கள்கொண்டு சென்று கண்டு நாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் என்க. மது - இனிமை. வாய்கள் - வார்த்தைகள். 3வந்து, என்பது, இடவழுவமைதி; சென்று என்பது பொருள். 4நாம் : ஈண்டு, முன்னிலைக்கண் வந்தது, நுங்கட்கு என்பதற்கு, நீங்கள் என்பது பொருள். கண்டீர்: முன்னிலையசைச்சொல்.

 

1. “த்ருஷ்டா ஸீதா” என்பது, ஸ்ரீராமா. சுந். 65 : 10.

2. “யாம் இதுவோ” என்பது முன்புள்ள பாடம்.

3. இதனை,

      “செலவினும் வரவினும்” (தொல். சொல். சூ. 28.) என்னும் பொதுச்
  சூத்திரத்தாற் கொள்க.

4. செங்கயல்போல் கருநெடுங்கண் தேமருதா மரைஉறையும்
  நங்கைஇவ ரெனநெருநல் நடந்தவரோ நாம்என்னக்
  கொங்கைகளும் குழைக்காதும் கொடிமூக்கும் குறைத்தழித்தால்
  அங்கணர சே ஒருவர்க் கழியாதோ அழகென்றாள்.

 
என்றவிடத்து “நாம்” என்பது முன்னிலைக்கண் வந்துள்ளமை காண்க.
  “காமரைவென்ற கண்ணோன்” (திருக்கோவையார் செய். 164.) என்ற
  செய்யுளின் உரையில் ‘நாம் என்னும் முன்னிலை யுளப்பாட்டுத் தன்மை
  உயர்வுதோன்ற முன்னிலைக்கண் வந்தது’ என்றார் பேராசிரியர்.