முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
377

வளவ

வளவில் என்னைப் பார்த்துச் சொல்லுங்கோள். நுங்கட்கே - 1அவன் அல்லாத உங்களுக்கு இத்தனையும் செய்யவேணும். இல்லையாகில், இவ்வளவிலே முகங்காட்டின உங்களுக்கும் அவனுக்கும் வாசி இல்லை. நுங்கட்கே - 2என் முல்லைகள்மேல் தும்பிகள் அன்றோ! உங்கள் ஜீவனம் நீங்களே நோக்கிக் கொள்ளவேணும். அவன் பெண் கொலை புரிந்து சொரூபஹாநி பாராமல் ஓலக்கம் கொடுத்திருந்தான்; நான் பாடோடிக் கிடந்தேன்; இனி உங்கள் சொரூபஹாநி நீங்களே போக்கிக் கொள்ளுங்கோள்.

(4)

634.

    நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
    வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
    செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
    எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!

   
பொ-ரை :- யான் வளர்த்த கிளிகாள்! உங்களுக்கு யான் ஒன்று சொல்லுகிறேன் வாருங்கோள்; கொடிய கண்களையுடைய பெரிய திருவடியை ஊர்ந்து வந்து, தீவினையேனாகிய என்னுடைய நெஞ்சினைக் கவர்ந்த சிவந்த திருக்கண்களையுடைய கரிய மேகம் போன்றவனை, சிவந்த திருவாயினையுடைய செழுமைபொருந்திய கற்பகம் போன்றவனை எங்கே சென்றாகிலும் கண்டு, தகுதி இதுவோதான் என்று சொல்லுங்கோள்.

    வி-கு :- வெங்கண் - தறுகண்மையுமாம். ஊர்ந்து வந்து கவர்ந்த கருமுகில் என்க.

 

1. “நுங்கட்கே” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அவன் அல்லாத’
  என்று தொடங்கி. என்றது, நிர்க்குணனானவனைப் போலன்றிக்கே,
  தயையோடுகூடிய உங்களுக்கு என்றபடி. அதனை விவரணம் செய்கிறார்
  ‘இல்லையாகில்’ என்று தொடங்கி.

2. “என் முல்லைகள்மேல் தும்பிகாள்” என்பதற்கு, இரண்டாவதாக ஒரு
  கருத்து அருளிச்செய்கிறார் ‘ஏன் முல்லைகள்மேல்’ என்று தொடங்கி.
  அதனை விவரணம் செய்கிறார் ‘அவன் பெண்கொலை’ என்று தொடங்கி.
  என்றது, என் முல்லைகள்மேல் வாழ்கின்ற தும்பிகள் ஆகையால், என்
  விஷயமான உங்கள் பாரதந்திரியத்திற்குக் கேடுவராமல் உங்களுக்கு
  ஜீவனமான என்னை நோக்குங்கோள் என்றபடி, பாடோடிக் கிடத்தல்-ஒரு
  புறமாகப் படுத்திருத்தல்.