முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
380

என

என்கிறது என்னுதல். 1“அங்குரூரன் கொடிய மனமுடையவன்” என்னுமாறு போலே. வெம்கண் புள் ஊர்ந்து வந்து - 2பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜபுத்திரனைப் போலே, 3“அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” என்றே அன்றோ அடியிலே தூதுவிட்டது, அப்படியே வந்தபடி. வினையேனை - 4அவனைப் போலே இரண்டு மனம் படைக்கப்பெறாத பாவத்தைச் செய்தேன்; புணர்ச்சிக் காலத்தில் அழிதற்கும், பிரிவு காலத்தில் தரித்திருக்கைக்குமாக இரண்டு மனம் உண்டாகப் பெற்றிலேன். நெஞ்சம் கவர்ந்த - நாட்டார்க்கு மனம் மலர்தற்குக் காரணமான விஷயம் என் மனத்தை அழிக்கும்படி ஆவதே! 5சாரத்தை எடுத்துக் கொண்டானாய்க் கோதை இட்டு வைத்துப்போனான்; பூக்கொண்டு புட்டில் பொகடுவாரைப்போலே. 6அறமணத்தன்றோ இவர் மனம் இருப்பது; “பூசும் சாந்து என் நெஞ்சம்” என்னும்படி. செம் கண் கருமுகில் - கண்களாலே குளிர நோக்கி, வடிவினை முற்றூட்டு ஆக்கிநின்ற நிலை. அன்றிக்கே, இத் தலையோடே வந்து கலந்த பின்பு, அத் தலைக்கு வந்த நிறைவினைச் சொல்லவுமாம். அன்றிக்கே பிரிவினைப் பற்றிப் பேசிக் கண்களாலே குளிர நோக்கி, அவன் விளைநீர் அடைத்துக்கொண்டு நின்றபடி.

    செய்ய வாய்-நூற்றுக் கணக்கில் புனைந்துரைகளைச் சொல்லப்புக்குப் புன்சிரிப்பினைச் செய்கிற திருவாய். செழும் கற்பகத்தை - விலக்ஷணமான கற்பகத்தை; வைலக்ஷண்யமாவது, தானே விரும்பித் தன்னைக் கொடுக்கை. கற்பகம், தன்னைக் கொடுக்கவும்மாட்டாது விரும்பவும்மாட்டாதே; இவன், தன்னைக்கொடுக்க வல்லவன்

 

1. “அக்ரூர: க்ரூரஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.

2. “புள்ளூர்ந்து வந்து நெஞ்சம் கவர்ந்த” என்று சேர்த்து, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘பட்டம் கட்டின’ என்று தொடங்கி.

3. புள்ளூர்ந்து வரவேண்டுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அருளாழி’ என்று தொடங்கி. இது, திருவாய். 1. 4 : 6.

4. “வினையேன்” என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
  ‘அவனைப்போலே’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
  ‘புணர்ச்சிக் காலத்தில்’ என்று தொடங்கி.

5. சரீரத்தைவிட்டு மனத்தினைக் கவருவான் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘சாரத்தை’ என்று தொடங்கி. புட்டில் - பூப்பெட்டி.

6. இவர் மனம் பூ ஆயினமைக்குக் காரணமும், அதற்குப் பிரமாணமும்
  காட்டுகிறார் ‘அறமணத்தன்றோ’ என்று தொடங்கி. ‘பூசுஞ்சாந்து’ என்பது,
  திருவாய். 4. 3 : 2.