முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
382

1ப

1பிறர் மனத்தினையும் கவர்ந்து தன் மனத்தினையும் கொண்டு கடக்க இருக்கையோ தக்கோர்மையாவது? 2அவனுக்கு அருள் இல்லை என்கையாவது, தர்மியை இல்லை என்கைஅன்றோ. தர்மியைச் சேர்ந்துள்ளதான கிருபையும் எங்கள் பக்கல் காணாமையாலே தமக்கு அதுவும் இல்லை என்று சொல்லுங்கோள். நீர்மை கொண்டாடி இருப்பார்க்கு இது அல்லது மர்மம் இல்லை; இதனையே சொல்லுங் கோள்.

(5)

635

    என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
    தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
    கன்மின்கள் என்றுஉம்மையான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லிச்
    சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!

   
பொ-ரை :- தீவினையேன் வளர்த்த சிறிய பூவைகளே! என் மின்னு நூல் மார்பன், என் கரும்பெருமான், என்கண்ணன், தன்னுடைய நீண்ட திருவடிகளின்மேலே பொருந்தியிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயினை நமக்கு அன்றிக் கொடான்; கற்றுங்கொள்ளுங்கோள் என்று உங்களை யான் கற்பித்து வைத்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு செல்லுங்கோள்.

    வி-கு :- மின்னுநூல் - பூணுநூல். நமக்கு : தனித் தன்மைப் பன்மை. உளப்பாட்டுப் பன்மையுமாம். கட்மின்கள், சென்மின்கள் என்பனவற்றில் ‘கள்’ அசைநிலை. சிறுபூவைகளே சொல்லிச் சென்மின்கள் என்க.

    ஈடு :- ஆறாம்பாட்டு. 3அடியார்களோடு ஏகரசன் ஆகையாலே நம் விருப்பத்தை முடித்துவைக்குமவன்பாடே சென்று இதுவோ

 

1. “நெஞ்சம் கவர்ந்த” என்றதனைக் கடாக்ஷித்து, “இது” என்றதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘பிறர் மனத்தினையும்’ என்று தொடங்கி.

2. பல திருப்பாசுரங்களிலும் “இதுவோ தக்கவாறு” என்பதற்கு இருவகையாக,
  பாவம் அருளிச்செய்கிறார் ‘அவனுக்கு’ என்று தொடங்கியும், ‘நீர்மை’
  என்று தொடங்கியும். விவரணம் செய்கிறார் ‘தர்மியைச் சேர்ந்துள்ளதான’
  என்று தொடங்கி. தர்மி - சர்வேசுவரன்.

3. “தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
  ‘அடியார்களோடு’ என்று தொடங்கியும், “கற்பியாவைத்த” என்றதனைத்
  திருவுள்ளம்பற்றி ‘இதுவோ தக்கவாறு’ என்று தொடங்கியும் அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.