முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
383

தக

தக்கவாறு என்னுங்கோள் என்று சில பூவைகளைக் குறித்துச் சொல்லுகிறாள்.

    என் மின்னுநூல் மார்வன் - 1தன் திருமேனியிலே சாத்தச் செய்தே என் மனத்திலே இட்டாற்போலே பிரகாசிக்கிற பூணுநூலைக் காட்டி என்னைத் தனக்கே உரியவளாக்கினவன். 2என் சரக்கானவன் கடக்க இருக்குங்காட்டில் என் சரக்கைப் பிறர்க்கு ஆக்குமோ? 3பூணுநூலின் அழகினை நினைவூட்டி என் நெஞ்சில் இருளை அறுத்தவன். 4தன் திருமேனியில் சாத்தின நூலைக் காட்டி என்னை நூலிலே வரச்செய்தான். என் கரும் பெருமான் - 5மேகத்திலே மின்னினாற்போலே அந்தப் பூணுநூலுக்குப் பரபாகமான வடிவை எனக்கு ஆக்கி என்னை அடிமைகொண்டவன். என் கண்ணன் - 6இப் படிகளாலே என்னைச் சேர்த்துத் தன்னை எனக்கு ஆக்கினவன். என், என், என் என்று பதங்கள்தோறும் சொல்லுகையாலே, ஒப்பனை அழகிலும், வடிவழகிலும், சௌலப்யத்திலும் தனித்தனியே ஈடுபட்டபடி. தன் மன்னு நீள் கழல்மேல் தண்துழாய் நமக்கு அன்றி நல்கான் - 7எல்லாம் செய்தாலும் “அவன் திருமேனியும் பக்தர்களுக்காகவே இருக்கிறது” என்று இருக்கிற திருமேனியைப்

 

1. “என்” என்றதனை மின்னு நூலோடு கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘தன் திருமேனியிலே’ என்று தொடங்கி.

2. “என்” என்றதனை, மார்வன் என்ற பதத்தோடு கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘என் சரக்கானவன்’ என்று தொடங்கி. என்
  சரக்கை-திருத்துழாயை.

3. “மின்னு” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பூணுநூலின்’ என்று
  தொடங்கி.

4. சிலேடையாக அருளிச்செய்கிறார் ‘தன் திருமேனியில்’ என்று தொடங்கி.
  நூலிலே வரச்செய்தான் - சாஸ்திரவஸ்யனாக்கினான்.

5. மேலே உள்ள பதத்தையும் கூட்டிக்கொண்டு “என் கரும் பெருமான்”
  என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘மேகத்திலே’ என்று தொடங்கி.

6. ‘இப்படிகளாலே’ என்றது, ஒப்பனை அழகு, வடிவழகுகளாகிற படிகளாலே
  என்றபடி.

7. தன்னை உபேக்ஷித்திருக்கிறவனை, “நமக்கு அன்றி நல்கான்” என்பான்
  என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘எல்லாம் செய்தாலும்’
  என்று தொடங்கி.

  “நதேரூபம் நசஆகார: நஆயுதாநி நசாஸ்பதம்
   ததாபிபுருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே”

 
என்பது, ஜிதந்தா. 5.