முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
385

தலைவனான சுக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத் தன்னைக்கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக்கொள்ளவேணும் என்பது சொல்லவும் வேணுமோ?” என்ற இடத்தில் சொல்லுவது ஒருவார்த்தை உண்டு. அது, அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன, ‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் 1புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது. இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச்செய்யும் வார்த்தை: 2‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது; இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒருகுறை இல்லை என்கிறது’ என்பது.

    நமக்கு அன்றி நல்கான் - 3தனித்து, இனியது அடியார்களை ஒழிய அநுபவிக்கமாட்டான். கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம் - 4நெஞ்சு ஒழிந்தபோது தனக்குத் தாரகமானவற்றைக் கற்பித்துவைக்கும்; நம் முதலிகள் ஒரோ சந்தானங்களாகச் ‘சிறியார், பெரியார்’ என்னாதே துவயத்தைக் கற்பித்து வைக்குமாறு போலே. பாதுகாக்கப்படுகின்ற பொருள்களான உங்களைப் பாதுகாக்கின்ற நான் கற்பித்துவைத்த மாற்றம். 6மாற்றமாவது, ‘நமக்கு அன்றி நல்கான்’ என்று எல்லா நிலைகளிலும்

 

1. ‘புண்படுத்தியபடி’ என்றது, ஒருபறவை, தன்னை அழிய மாறி இப்படி
  ரக்ஷித்தால், நாம் “பிராணனை விடுதல்” என்னுமது ஒழிய, சேதணன்
  ஆன வாசிக்கு ஏற்றமாக ஒன்றும் செய்யப்பெற்றிலோம் என்று
  புண்படுத்தினபடி என்றவாறு.

2. ‘நாம்பண்ணின’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து, வேடுவனது
  சரணாகத ஆநுகூல்யாதிகளால் அன்றிக்கே சரண்யமான புறாவினது
  குணாதிக்யத்தாலே பலம் சித்தித்தது போன்று, நம்முடைய ஆநுகூல்ய
  சங்கல்பாதிகளாலன்றிக்கே சரண்யனான சர்வேசுவரனுடைய
  குணாதிக்யத்தாலே பலிக்கும் என்பது. அவ்யபிசாரியாகமாட்டாது -
  பலத்தோடே கூட்டுவிக்கமாட்டாது.

3. மேலே அருளிச்செய்த ஐகரஸ்யத்தை விவரணம் செய்கிறார் ‘தனித்து’
  என்று தொடங்கி.

4. இவளுக்குக் கற்பிப்பதற்குக் காலம் உண்டோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘நெஞ்சு ஒழிந்தபோது’ என்று தொடங்கி. நெஞ்சு
  ஒழிந்தபோது - மனம் தன்நிலையில் நின்றபோது. இதற்குத் திருஷ்டாந்தம்
  காட்டுகிறார் ‘நம்முதலிகள்’ என்று தொடங்கி.

5. “மாற்றம்” என்றது, ஐகரஸ்யமாதல், கிருபையாதல். இவற்றையே
  அருளிச்செய்கிறார் ‘மாற்றமாவது’ என்று தொடங்கி.