New Page 1
போக்கவல்லீர்கோளோ?
1விலக்குதல் இல்லாத மாத்திரத்தைக் கொண்டு இவற்றைக் காரியம் கொள்ளப்
பார்க்கிறாள். வினையாட்டியேன் - உங்களைக் கொண்டாடுகை தவிர்ந்து, காரியம் கொள்ளும் படியான
துக்கத்தை அடைந்தவளானேன். 2“மாசுச:” என்று சொன்னவன் விளைத்த சோகத்தை,
அசேதனங்கொண்டு தீர்க்க இருக்கிற மஹாபாபியானேன். பாசறவு - துக்கம்.
(7)
637
பாசற வெய்தி இன்னே
வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி
வெள்ளைக்குருகே!3 அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி
வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால்
மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.
பொ-ரை :- குற்றம் நீங்கிய சிறகுகளையுடைய வெண்மைநிறம்
பொருந்திய குருகே! உறவினர்கள் பக்கல் பற்று அற்று, இப்படியே எத்தனை ஊழிக்காலம் வருந்துவேன்
வினையேன்? குற்றம் நீங்கிய நீலச் சுடரையுடைய முடியைத் தரித்த நித்திய சூரிகளுக்குத் தலைவனான
எம்பெருமானைக் கண்டு, குற்றம் நீங்கிய நும்மை அல்லாமல் பின்னர் வேறு ஒரு பொருளை மறித்துப்
பார்ப்பது இல்லாதவளானாள் என்று என் மாட்டு அருள்செய்து ஒருநாள் கூறவேண்டும் என்கிறாள்.
வி-கு :-
குருகே! வானவர்கோனைக் கண்டு நும்மை அல்லால்
பேர்த்து மற்று மறு நோக்கு இலள் என்று ஒருநாள் அருள்செய்து கூறுக என்று ‘கூறுக’ என்னும் வினையைக்
கொணர்ந்து கூட்டிப்பொருள் முடிவு காண்க.
ஈடு :-
எட்டாம்பாட்டு. 4முன்பே நின்ற குருகினைக்
குறித்து, நித்திய சூரிகளைப்போலே உம்மால் அல்லது செல்லாதே, உம்மைப் பிரிந்து நோவுபடுகிறாள்
என்று சொல் என்கிறாள்.
1. அறிவில்லாத பொருளைப்
பார்த்துக் கூறினால் அவை காரியம்
செய்யுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘விலக்குதல்
இல்லாத’ என்று தொடங்கி.
2. “வினையாட்டியேன்” என்றதற்கு,
வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார்
“மாசுச:” என்று தொடங்கி.
3. “அருள்செய் யொருநாள்”
என்பதும் பாடம்.
4. “வானவர்கோனை”
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|