639
639
வந்திருந்து உம்முடைய
மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி
அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்குஎன்னை
இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி
உரையீர்மறு மாற்றங்களே.
பொ-ரை :- உம்முடைய அழகிய சேவலும் பெண்ணாகிய நீரும்
உம்முடைய உறவு முறையினரும் எல்லாரும்கூட இடையூறு சிறிதும் இல்லாமல் பூவின்மேலே தங்கியிருக்கின்ற
அன்னங்காள்! இங்கே வந்திருந்து என்னுடைய திருவை மார்பிலேயுடைய எம்பெருமானுக்கு என்னை இவள்
இன்னவாறு ஆனாள் என்று தனி இடத்தில் ஒருவார்த்தை அறிவித்து அவர் கூறும் மறுமாற்றங்களை எனக்குச்
சொல்லுங்கோள்.
வி-கு :-
வந்திருந்து அலர்மேல் அசையும் அன்னங்காள்
என்க. அன்றிக்கே, வந்திருந்து மறுமாற்றங்கள் உரையீர் என்றுமாம். அந்தரம் - வேறுபாடுமாம்.
மந்திரம் - இரகசியம்.
ஈடு :- பத்தாம்பாட்டு.
ஆணும் பெண்ணும் கூடியிருக்கிற அன்னங்கள் சிலவற்றைக் குறித்து, பிராட்டியும் அவனுமான ஏகாந்தத்திலே
என்நிலையை விண்ணப்பம் செய்து மறுமாற்றம் வந்து சொல்லவேணும் என்கிறாள்.
வந்து இருந்து -
2இது என்ன ஆபத்திற்குத் துணையாகும் தன்மைதான்! உங்களுடைய நல்லெண்ணம் இருந்தபடி
என்தான்! 3இளையபெருமாளை இடுவித்து வெதுப்பி அழைப்பிக்க வேண்டா திருக்கை. வந்திருந்து-4மஹாராஜருடைய
இடரைப் பெருமாள் வினவிக்கொண்டு சென்று தீர்த்தாற்போலே என் துன்பத்துக்கெல்லாம்
1. “மந்திரத்து ஒன்று உணர்த்தி
உரையீர்” என்றது போன்றவைகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “வந்திருந்து” என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘இது
என்ன’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
‘உங்களுடைய’
என்று தொடங்கி. இதனால், இவள் அழையாதிருக்க ஆபத்திலே வந்து
உதவுகையும், அதற்கு
அடியான நல்லெண்ணமும் கூறுகிறது என்றபடி.
3. இதனால் போதரும் வேறுபாட்டினைக்
காட்டுகிறார் ‘இளையபெருமாளை’
என்று தொடங்கி. வெதுப்பி - பயப்படுத்தி. இங்கு, கம்ப. கிட்கிந்தைப்
படலம், 3-முதல் 8-முடிய உள்ள செய்யுட்களைக் காணல்தகும்.
4. தாங்களே
வந்ததற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘மஹாராஜருடைய’
என்று தொடங்கி. சுக்கிரீவனை ‘மஹா
ராஜர்’ என்பது, வைணவப்
பெருமக்கள் மரபு.
|