முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
397

உடன

உடன்கேடராயிருந்து. உம்முடைய மணிச்சேவலும் நீரும் எல்லாம் - 1பரமபதத்தில் ஆண்களும் பெண்களுமாக இருந்தாலும் அடிமைக்கு உறுப்பாக இருக்குமாறுபோலே, இவற்றினுடைய இந்தப் பேதமும் தன்னுடைய காரியத்துக்குக் காரணம் என்றிருக்கிறாள். மணிச்சேவல் - 2இதுவும் ஒரு சேவலேதான்! 3தன்னுடைய மணிச்சேவல் கடக்க இருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான் குறியழியாதேயன்றோ இருக்கிறது. எல்லாம் - 4“புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு” என்னுமாறு போலே. 5மனைவி புத்திரர்கள் முதலாயினார்களோடே கூடப் பிறர் காரியம்செய்ய ஒருப்பட்டிருப்பாரைப்போலே. அந்தரம் ஒன்றும் இன்றி - 6என்னைப் போலே பிரிவோடேகூடி இருக்கிற கலவி இன்றிக்கே இருக்கப் பெறுவதே. 7கலவியை வளர்க்கக்கூடியதான பிரிவும் இன்றிக்கே. அலர்மேல் அசையும் அன்னங்காள் - 8ஆணும்பெண்ணுமாகச் சேர்ந்திருப்பார்க்குப் பூவிலும் கால் வைக்கலாமன்றோ. 9பூவிலே

 

1. உம்முடைய மணிச்சேவலும்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘பரமபதத்தில்’ என்று தொடங்கி.

2. “மணிச்சேவல்” என்று வர்ணித்ததற்கு, பாவம் ‘இதுவும் ஒரு சேவலேதான்’
  என்பது.

3. தனக்கு மணிச்சேவல் இல்லையோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தன்னுடைய மணிச்சேவல்’ என்று தொடங்கி.
  மணிச்சேவல் - ஈச்வரன்.

4. “மணிச்சேவலும் நீரும்” என்பது, கணவன் மனைவி இவர்களைச்
  சொல்லுகையாலே “எல்லாம்” என்பது, புத்திரர் முதலானவர்களைக்
  கூறுகிறது என்றுகொண்டு, அதனைப் பிரமாணத்தோடு அருளிச்செய்கிறார்
  ‘புத்திர பௌத்திரர்களோடு’ என்று தொடங்கி. “ஸபுத்ர பௌத்ரஸ்ஸகண:”
  என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 99.

5. அதனை விவரணம் செய்கிறார் ‘மனைவி புத்திரர்கள்’ என்று தொடங்கி.

6. “அந்தரம் இன்றி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘என்னைப்போல’
  என்று தொடங்கி.

7. “ஒன்றும் இன்றி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘கலவியை
  வளர்க்கக்கூடியதான’ என்று தொடங்கி.

8. “உம்முடைய மணிச்சேவலும்” என்பதனையும் கூட்டி “அலர்மேல்”
  என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஆணும் பெண்ணுமாக’ என்று
  தொடங்கி.

9. “அசையும்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பூவிலே’ என்று
  தொடங்கி.