முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
398

கால் பொருந்தும்படியான செருக்கு அன்றோ உங்களது? ‘குறைவு அற்றார் இருக்கும்படி இதுவன்றோ.

    என் திருமார்வற்கு - 2எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப்படுகிறேனோ? 3“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்” என்கிறபடியே, சொன்ன வார்த்தை விலைபோமவள் முன்னால் சொல்லுங்கோள்; 4நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள். என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று - 5பேச்சுக்கு நிலமன்று போலே காணும். என்னை - அச்சேர்த்தியிலே அடிமைசெய்ய ஆசைப்பட்டிருக்கிற என்னை. ‘இப்படி சீர்கேட்டினை அடைந்தாள் இவள் என்று, 6இவள் பசலை நிறத்தைத் தம்முடம்பிலே காட்டவும் வற்றாகாதே இவை’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். 7அன்றிக்கே, உம்முடைய தேவாரமோ! இவள் அந்தப்புர பரிகரம் அன்றோ என்னுங்கோள் என்னுதல்.

 

1. ‘ஆணும் பெண்ணுமாக’ என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘குறைவற்றார்’ என்று தொடங்கி.

2. “என்திரு” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘எனக்கு’ என்று
  தொடங்கி. மிறுக்கு - கிலேசம்.

3. “என் திருமார்வற்கு உணர்த்தி” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘பிராட்டி சந்நிதியில்’ என்று தொடங்கி.

  “ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.

4. “என்” என்பதனைத் “திரு”வோடே கூட்டி, மேலும் ஒரு கருத்து
  அருளிச்செய்கிறார் ‘நான்பற்றின’ என்று தொடங்கி. என்றது, ‘மலர்மகள்
  விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்’ என்றும், “நம் திருவுடையார்”
  என்றும் நான்பற்றின அடைவே என்னுதல். “உம்முடைய மணிச்சேவல்”
  என்று உங்களைப் புருஷகாரமாகக் கொண்டு, சேவலை நான் பற்றிய
  முறையே, நீங்களும் பிராட்டி புருஷகாரமாக அவனைப் பற்றுங்கோள்
  என்னுதல்.

5. “இன்னவாறு” என்கிறது என்? பேசலாகாதோ? என்ன, ‘பேச்சுக்கு’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. ‘கேண்மின்’ என்னாமல், “காண்மின்” என்ற பதத்துக்கு வேறும்
  ஒருவகையில் கருத்து அருளிச்செய்கிறார் ‘இவள் பசலை நிறத்தை’ என்று
  தொடங்கி. என்றது, அன்னம் வெண்மையாக இருக்கும் ஆகையாலே,
  அதனைக்கொண்டு இப்படி வெளுத்த பிரகாரத்தையுடையவள் என்பதனைக்
  காட்ட வற்றாயிருத்தலைக் குறித்தபடி.

7. பெரியபிராட்டியார் பரிகரத்வமாகிற பிரகாரத்தையுடையவள் என்று,
  மூன்றாவதாக ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று
  தொடங்கி. ‘உம்முடைய தேவாரமோ’ என்றது, அர்ச்சக பரதந்திரமான
  வீட்டில் உள்ள அர்ச்சாவதாரம்போலே உமக்குப் பரதந்திரமோ? என்றபடி.
  தேவாரம் - வீட்டில் அர்ச்சிக்கும் இறைவனுடைய வடிவு.