அர
அர்ச்சை - அர்ச்சகர்கட்கு
வசப்பட்டதன்றோ. மந்திரத்து ஒன்று உணர்த்தி-ஓலக்கத்திற் சொல்லாதே கொள்ளுங்கோள்;
1“கொல்லத் தக்கவன்” என்பார் இருக்கவும் கூடும். 2அன்றிக்கே, அவள்
சொல்லே கேட்குமிடத்தே சொல்லுங்கோள் என்னுதல். உரையீர் மறுமாற்றங்களே - 3அவன்
கிரமப் பிராப்தி தோற்ற வார்த்தை சொல்லவும், அதுதான் ஒண்ணாது என்று “குற்றம் செய்யாதார்
எவர்தாம்” என்று விரைவுபடுத்துமவர் முன்னே சொல்லுங்கோள்.
4மந்திரம்
- பிரணவம். ஒன்று - அதில் நடுப்பதம். அதிற் சொல்லுகிறபடியே அநந்யார்ஹதையை விண்ணப்பம்செய்து.
உரையீர் மறுமாற்றங்களே - முன்பு செய்துபோந்த குற்றங்களைப் பார்த்து அவன் சொல்லுகிற வார்த்தைகளையும்,
சம்பந்தத்தையும் நம் நிலையையும் பார்த்து அவள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்டு வந்து
சொல்லுங்கோள்.
(10)
640
மாற்றங்கள் ஆய்ந்து
கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில்
சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள்
இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல்
உருகாநிற்பர் நீராயே.
பொ-ரை :- வாசனையைக் கொண்டுள்ள அழகிய சோலைகள் சூழ்ந்த
திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபர், சிறந்த வார்த்தைகளை ஆராய்ந்து கொண்டு மதுசூதபிரானுடைய
திருவடிகள்மேல் அருளிச்செய்த தாமே தோன்றிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற பத்துப்
பாசுரங்களாகிற
1. ‘கொல்லத்தக்கவன்’
என்று கூறியவன், சுக்ரீவன். ஸ்ரீராமா. யுத். 17 : 27.
2. “மந்திரத்து” என்றதற்குத்
தனியிடம் என்று பொருள் அருளிச்செய்தார்
மேல். ‘போக தசையிலே’ என்று பொருள் அருளிச்செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி. என்றது, கேவலம் தனி இடமானால்,
மறுக்கவும் கூடும்; போக தசையானால்,
அவள் விரும்பாதிருக்கவும்
தானே விரும்பிக் கேட்பான் என்றபடி.
3. “உரையீர் மறுமாற்றங்கள்”
என்ற பதங்களை எடுத்துக்கொண்டு
“உரையீர்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அவன் கிரமப்பிராப்தி’
என்று தொடங்கி. கிரமப்பிராப்தி - கிரமத்திலே அடைதல். “நகஸ்சித்
நஅபராத்யதி” என்பது,
ஸ்ரீராமா. யுத். 116 : 44.
4. நான்காம்
அடிக்கு, மூன்றாவதாக வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார் ‘மந்திரம் - பிரணவம்’ என்று தொடங்கி.
நடுப்பதம்
- உகாரம், அவள் - பெரிய பிராட்டியார்.
|