முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
401

1மந

    1மந்திரங்களை இருடிகள் காணுமாறு போலே. 2“சொல் பணி செய் ஆயிரம்” என்று ஆழ்வாருடைய திருவாக்கிலேபுக்கு ‘அங்கிட்டுப் பிறந்து நாம் தூயராய் அடிமை செய்யவேணும்’ என்று அச்சொற்கள் தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து அடிமை செய்கிறபடி. 3வைதிகர் அல்லாதாருடைய வாக்கில் புக்க தோஷம் தீர்ந்தது இப்போதேயன்றோ சொற்களுக்கு. 4“போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்கிறபடியே, ஆழ்வார் திருவாக்கிலே பிறக்கையாலே முன்புள்ள தோஷமும் பின்புள்ள தோஷமும் தீர்ந்தது காணும் சொற்களுக்கு. ஊற்றின்கண் நுண்மணல்போல் நீராய் உருகாநிற்பர் - 5இவை கற்கப்படாதன என்கிறார். அதாவது, என் துயர ஒலியைக் காட்டி நாட்டினை அடைய அழித்தேன் என்கிறார். 6இவர் கிலேசம் அவன் முகம் காட்டத் தீரும்; இப் பாசுரம் நித்தியமாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்; ஊற்றிடத்து உண்டான நுண்ணிய மணல்போலே உருகுகின்ற மனத்தையுடையராய் நீராய் உருகாநிற்பர். இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில், பகவானுடைய குணங்

 

1. ஆயின், “குருகூர்ச் சடகோபன் சொன்ன” என்றது, சேருமாறு யாங்ஙனம்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மந்திரங்களை’ என்று
  தொடங்கி.

2. ‘மனம் முன்னே வார்த்தை பின்னே’ என்று மேலே அருளிச்செய்ததனை
  விவரணம் செய்கிறார் ‘சொற் பணிசெய் ஆயிரம்’ என்று தொடங்கி. இது,
  திருவாய். 1. 10 : 11.

3. சொற்கள் ஆழ்வார் திருவாக்கிலே புக்கு வந்ததனால் வந்த ஏற்றம் ஏது?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘வைதிகர் அல்லாதார்’ என்று
  தொடங்கி.

4. இப்போது தோஷம் தீர்ந்தால், மேலுள்ள தோஷத்திற்கு வழி என்? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘போயபிழையும்’ என்று தொடங்கி.
  இது, திருப்பாவை, 5.

5. “ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர்” என்கிறவருடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘இவை கற்கப்படாதன’ என்று
  தொடங்கி.

6. “உருகாநிற்பர்” என்ற நிகழ்காலத்துக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவர்
  கிலேசம்’ என்று தொடங்கி.