முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
404

New Page 1

போகவேண்டுகையாலே தடை உண்டு; இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ. 1இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப்போகாது, பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப்போகாதவாறு போலே. 2அவள் இருப்பு பிறர்மேல் வைத்த திருவருளாலே ஆனாற்போலே, இவருடைய வியசனமும் பிறர்மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி. 3அவள் சிறையிருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதிவைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே, அன்று இவர்தாம் வியசனப் பட்டாரேயாகிலும் இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப்பந்தலாயிற்றது. 4திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத் தம்மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.

    5
“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்? நாம் உம்மை விட்டுத் தூரப்போனோமோ? ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி இருக்கிற உலகமே உருவமாக இருக்கும்

 

1. “பக்கம் நோக்கறியான் என்பைந்தாமரைக் கண்ணனே” என்கிறபடியே,
  பக்கம் நோக்கறியாதவன் இப்படிக் கூப்பிட இவரை விடுகைக்குக் காரணம்
  என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்படுகிற’ என்று
  தொடங்கி.

2. ஆயின், கர்மத்தைக் காரணமாகக் கூறினாலோ? எனின், ‘அவள் இருப்பு’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது, பிராட்டி,
  ஆஸ்ரிதார்த்தமாக இலங்கையிலே இருந்தாற்போலே, இவரும்,
  ஆஸ்ரிதார்த்தமாகத் துக்கப்பட்டாரேயாகிலும் சிலகாலம் இந்த உலகத்திலே
  இருந்தால் ‘நாடாகத் திருந்தும்’ என்று இட்டுவைத்தானாகையாலே, ‘கர்மம்’
  என்ன ஒண்ணாது என்றபடி.

3. அதனை விவரணம் செய்கிறார் ‘அவள் சிறை இருந்தபடியை’ என்று
  தொடங்கி.

4. மிடற்றோசையாலே ஈடுபடக் கூடுமோ? என்ன, சிம்ஹாவலோகந
  நியாயத்தாலே, (சிங்கநோக்கு) திருஷ்டாந்தத்தோடு விடை
  அருளிச்செய்கிறார் ‘திருக்குழல் ஓசையாலே’ என்று தொடங்கி. இந்த
  வாக்கியத்தை, ‘இவர் மிடற்றோசைக்குத் தடை இல்லை அன்றோ’ என்று
  மேலே கூறிய வாக்கியத்தோடே கூட்டுக.

5. ஆனால், முதல் பாசுரத்தில், உலகமே உருவமாக இருக்கும் தன்மையைச்
  சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “வாரீர்”
  என்று தொடங்கி. ‘உலகமே உருவமாக இருக்கும் தன்மையைக்
  காட்டினோமே’ என்றது, மேலே ‘யாவையும் யாவருமாய்” என்றதனைத்
  திருவுள்ளம்பற்றி.