641
641.
நீராய் நிலனாய்த்
தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள்
இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங்
கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும்
விண்ணும் மகிழவே.
பொ-ரை :- தண்ணீராகிப் பூமியாகி நெருப்பாகிக்
காற்றாகி நீண்ட ஆகாசமாகிச் சிறப்புப் பொருந்திய சூரிய சந்திரர்களாகிச் சிவனாகிப் பிரமன்
ஆனாய்; மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாகக் கொடியேனாகிய அடியேனிடத்து, கூர்மைபொருந்திய
சக்கரத்தையும் வெண்மை பொருந்திய சங்கையும் கைகளிலே ஏந்திக்கொண்டு ஒருநாள் வரவேண்டும்.
வி-கு :-
உலகமே உருவமாக இருக்கும் தன்மை, முதல் இரண்டு
அடிகளில் கூறப்பட்டது. மகிழ ஏந்தி வாராய் என்க. வாராய் - வர வேண்டும்; விதிவினை. இத் திருவாய்மொழி,
கலிநிலைத்துறை.
ஈடு :-
முதற்பாட்டு 1“உலகமே உருவமாயிருக்கும்
தன்மையைக் காட்டித் தந்தோம் அன்றோ” என்ன, அது போராது; அசாதாரணமான வடிவைக் காணவேண்டும்
என்கிறார்.
நீராய் நிலனாய்த்
தீயாய்க் காலாய் நெடுவானாய் சீர் ஆர் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய் -
2“இது அறியாமல் அவ் வருகே ஆசைப்படுகிறார் என்று கொள்ள ஒண்ணாதபடி, தாம் அறிந்தமை தோற்ற
விண்ணப்பம் செய்கிறார். நீராய் - 3நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார்.
“நீர்தோறும்
1. “கூராராழி வெண் சங்கேந்திக்
கொடியேன்பால் வாராய்” என்னுமளவும்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. உலகமே உருவமாக
இருக்கும் தன்மை உத்தேசியம் அன்றாகில்,
“யாவையும் யாவருமாய் நின்ற மாயன்” என்பது போன்று
திரளச்
சொல்லாமல், “நீராய் நிலனாய்” என்று தொடங்கி விவரித்துச்
சொல்லுவான் என்? என்ன,
‘இது அறியாமல்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
3.
“நீராய்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நாராயணனாவது’ என்று
தொடங்கி. என்றது, தண்ணீர்க்குக்
காரணமாய் அதனைச்
சரீரமாகவுடையனாயிருக்கும் இருப்பைப் பண்டே அறிவன் என்றபடி.
அறிந்தமைக்குச்
சூசகம் யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘நீர்தொறும்’ என்று தொடங்கி. இது, திருவாய்.
1. 1 : 10. “ஆபோ நாரா
இதிப்ரோக்தா:, நீர்கள் நாரம் என்று சொல்லப்பட்டன” என்பது ஈண்டு
அநுசந்தேயம்.
|