1இ
1இவைதாம்
ஒருபொருளும் அன்றே; பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ளவேணும்
அன்றோ: 2அது செய்யும்போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத்
துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க்கொண்டு தோற்றுவிக்குமாறுபோலே, தண்ணீரை உண்டாக்கி,
3அது நீர்ப்பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி, பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே
அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப்பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே
அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக்கொடுக்கின்ற
ஆகாசத்தை உண்டாக்கி. இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்டசிருஷ்டியைப் பண்ணி
நின்றது. 4இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டுவைக்க ஒண்ணாதே
அன்றோ; அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற்போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி. 5நீர்க்களிப்பு
அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கினபடி. அண்டங்களுக்குள்ளே வாழ்கின்றவர்களாய்க்கொண்டு
நின்று, ஒருவன் மனைந்து கொண்டுவர ஒருவன் அழித்துக்கொடு வரும்படி பிரம ருத்திரர்களை உண்டாக்கி.
1. ஒன்றில் ஒன்று அதிகமாயிருத்தலைப்
படைக்கும் கிரமமாக வேண்டுவான்
என்? சமப்பிரதானமாயிருத்தல் சிருஷ்டிக் கிரமம் ஆனாலோ? எனின்,
“நாநா வீர்யா: ப்ரதக் பூதா:” (ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 2 :) என்ற சுலோகத்தைத்
திருவுள்ளம்பற்றி
‘இவைதாம்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
2. பலபொருள்களை ஒரு
பொருளாக்கிக் காரியம் கொள்ளவேண்டும்
என்னுமதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘அது செய்யும்போது’
என்று
தொடங்கி. செதுகு - கூளம்.
3. ஐம்பெரும் பூதங்களைச்
சொல்லுமிடத்து, படைப்பு முறையிலேயாதல்,
அழிக்கு முறையிலேயாதல் கூறாமல், முறைபிறழக் கூறியதற்குக்
காரணம்
அருளிச்செய்கிறார் ‘அது நீர்ப்பண்டமாகையாலே’ என்று தொடங்கி.
4. அண்ட சிருஷ்டியைச்
சொன்ன பின்னர், சந்திரசூரியர்களை
அருளிச்செய்ததற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
‘இனி,
பெரியதொரு’ என்று தொடங்கி.
5.
இருவரில் ஒருவரைப் படைத்தால் போதியதாமே? இருவரையும்
படைப்பான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘நீர்க்களிப்பு’ என்று தொடங்கி.
|