என
என்று, இவர் தமக்கு
ஈசுவர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப்போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.
கூர் ஆர் ஆழி வெண்
சங்கு ஏந்தி - 1ஸ்ரீ பாஞ்சஜன்யத்தில் வெண்மைபோன்று திருவாழியில் கூர்மையும் இவர்க்குக்
கவர்ச்சியாயிருக்கிறபடி 2பகைவர்களைத் துணிக்கத் துணிக்கச் சாணையில் ஏறிட்டாற்போலே
கூர்மை மிக்கிருத்தலின் ‘கூர்ஆர் ஆழி’ என்கிறது. 3அசாதாரண விக்கிரஹத்துக்கு
லக்ஷணமோ தான் கையும் திருவாழியுமாயிருக்கை. கொடியேன்பால் - 4எனக்கு இங்ஙனே ஒரு
நிர்ப்பந்தம் உண்டாவதே! என் சொரூபத்திற்கு விரோதங்காண் நான் பண்ணுகிறது. 5ஸ்ரீ
பரதாழ்வானைப்போலே பொகட்ட இடத்தே கிடக்க வல்ல தன்மையனாகப் பெற்றிலேன்;
இளையபெருமாளைப்போலே, ‘நில்’ என்ன, “என்னை அடியவனாகக் கொள்” என்று நிர்பந்திக்கும்
தன்மையனாவதே! வாராய் - 6ஆசைப்பட்டாலும் நடக்கவல்லார் வருமித்தனை அன்றோ.
‘வாராய்’ என்ற அளவிலே வந்து கொடு திரியப்போமோ? என்னில், ஒருநாள்-விடாயர் ‘ஒரு
கால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே ‘ஒருநாள்’ என்கிறார். மண்ணும்
விண்ணும் மகிழவே -7எனக்காக வந்திலையாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார்.
8‘மானாவிச்சோலைபோலே ஆவது அழிவதான இது
1. “வெண்சங்கு” என்பது
போன்று, அழகிற்குக் காரணமான
அடைமொழியைக் கூறாமல், கூர்மையைச் சொல்லுவது என்? என்ன,
அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீபாஞ்சஜன்யத்தில்’ என்று தொடங்கி.
2. “ஆர்” என்ற
சொல்லிற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘பகைவர்களை’
என்று தொடங்கி.
3. அசாதாரண விக்கிரஹத்தை
ஆசைப்படுகிறவர் “கூராராழி
வெண்சங்கேந்தி” என்பான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘அசாதாரண’ என்று தொடங்கி.
4. “கொடியேன்” என்று தம்மைச்சொல்லுவதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார்
‘எனக்கு இங்ஙனே’ என்று தொடங்கி. சொரூபத்திற்கு - பாரதந்திரிய
சொரூபத்துக்கு.
5. ‘திருஷ்டாந்தத்தோடு
விவரணம் செய்கிறார்’ ‘ஸ்ரீபரதாழ்வானைப்போலே’
என்று தொடங்கி. “குருஷ்வமாம்” என்பது, ஸ்ரீராமா.
அயோத். 31 : 22.
6. வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது
என்? இவர் போக ஒண்ணாதோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஆசைப்பட்டாலும்’ என்று
தொடங்கி.
7. “மண்மகிழ வாராய்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘எனக்காக’
என்று தொடங்கி. எனக்காக - என்சத்தை அழியாமைக்காக.
8.
மானாவிச்சோலை - மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.
|