New Page 1
போனால் என்செய்யவேணும்?’
என்று இருக்கிறாயாகில், அவ்விபூதியும் அழியுங்காண்; இது அழியவே 1அதுவும் அழிந்ததாமன்றோ.
அதுவும் இருக்கச்செய்தே அன்றோ, இது அழிய 2“அந்தப் பரமாத்மா தனித்து
இருக்கும்போது சந்தோஷத்தை அடைய இல்லை” என்றது. 3இனித்தான், பிரளயத்துக்கு அழியாது
என்ற அளவில், துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே! மகிழவே -அழிகை தவிர்ந்து தரிக்கைக்காக.
(1)
642.
மண்ணும் விண்ணும் மகிழக்
குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும்
கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு
உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத்
தூடே நடவாயே.
பொ-ரை :- மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாக
வாமனாவதாரமாகி வலியைக் காட்டி மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட ஆச்சரியத்தையுடைய
அம்மானே! நான் உன்னை அடைந்து கண்டு மகிழ்ந்து கூத்தாடும்படியாக நீ தானே வந்து கிட்டி இந்தப்
பூமியிலே ஒருநாள் நடந்துவரல் வேண்டும்.
வி-கு :-
மகிழக் குறளாய்க் காட்டிக் கொண்ட அம்மான்
என்க. நான் கூத்தாட நடவாய் என்க, நடவாய்: விதிவினை; நடக்கவேண்டும் என்பது பொருள்.
ஈடு :-
இரண்டாம்பாட்டு. 4“வாராய் என்று நிர்ப்பந்தித்து
அன்று காணும் நம்மைக் காண்பது; உம்மை ஒரு தேச விசேடத்தே அழைத்துக்காணும் காட்டுவது” என்ன,
அவ்வடிவு தன்னையே இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ? என்கிறார்.
1. நித்தியவிபூதி அழியக்கூடுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அதுவும்’ என்று தொடங்கி.
2. “ஸஏகாகீ ந ரமேத” என்பது.
3. மேலதற்கே வேறு வகையாகவும்
ஒருவிடை அருளிச்செய்கிறார்
‘இனித்தான்’ என்று தொடங்கி. அந்த உலகம் அழிதலாவது, இல்லாததற்குச்
சமமாதல்.
4. “ஞாலத்தூடே
நடவாயே” என்பதனைக் கடாக்ஷித்து ஈசுவர
அபிப்பிராயத்தை அருளிச்செய்கிறார் “வாராய்” என்று தொடங்கி.
“மண்ணும் விண்ணும் மகிழ” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவ்வடிவு தன்னையே’ என்று
தொடங்கி.
|