மண
மண்ணும் விண்ணும்
மகிழக் குறளாய் - 1இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய
விபூதியும் அழியுமாகாதே. ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு
போலே. அன்றிக்கே, உகவாதாரும் மகிழும்படி யன்றோ வந்து தோற்றிற்று என்னுதல். வலம் காட்டி
- 2கொடை என்ற குணம் சிறிது கிடக்கையாலே இராவணன் முதலியோர்களைப் போலே அம்பாலே
அழிக்கப்போகாதே; அழகாகிற பலத்தைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடி. 3சுக்கிரன்
முதலானோருடைய தடை உண்டாயிருக்கச்செய்தே அன்றோ, அழகுக்குத் தோற்றுக் கொடுத்துக்கொண்டு நின்றபடி.
குறளாய் - 4கோடியைக் காணி ஆக்கினாற்போலே முகந்து கொள்ளலாயிருக்கை. மண்ணும்
விண்ணும் கொண்ட - பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக்கொண்ட. இந்திரனுக்குக்
கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது, அவன் அசுரத்தன்மை வாய்ந்தவனாகையாலே அவன்
பக்கல் தானே கொண்டானாகக் கொண்டபடியும், தன்னையடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும்
என்க.
1. “மண்ணும் விண்ணும் மகிழ”
என்கிறவருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘இவ்வளவில்’ என்று தொடங்கி. ‘இவ்வளவில்’
என்றது, மஹாபலி கையிலே அகப்பட்ட இவ்வளவிலே என்றபடி. “மகிழ”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘ஒருபாட்டம்’ என்று தொடங்கி.
இங்ஙனம் அருளிச்செய்வதனால், “மகிழ” என்பது, ஈண்டு
தரித்திருத்தலைச்
சொல்லுகிறது.
2. வலம் காட்டுவது எற்றிற்கு?
அவனைக் கொல்லுதல் ஆகாதோ? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கொடை என்ற குணம்’ என்று
தொடங்கி.
3. ‘வாய்மாளப் பண்ணி’
என்கிறது என்? ‘வஞ்சனை’ என்று அறியாமலே
கொடுத்தான் என்றாலோ? எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘சுக்கிரன் முதலானோருடைய’ என்று தொடங்கி.
கண்ட திறத்திது கைதவம்
ஐய!
கொண்டல் நிறக்குறள்
என்பது கொள்ளேல்
அண்டமு முற்றும் அகண்டமு
மேனாள்
உண்டவ னாமிது ணர்ந்துகொள்
என்றான்.
என்பது, கம்பராமாயணம்,
வேள்விப் பட. 26.
4.
“குறளாய்” என்று சொல்லாநிற்க, ‘அழகினைக் காட்டினான்’ என்னக்
கூடாதே? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கோடியைக்காணி’
என்று தொடங்கி.
|