முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
414

எங

எங்களுடைய பரபரப்பினால் மாத்திரம் சந்தோஷமடையும்; இதுதான் எங்களுக்குப் பெரிய செல்வம்” என்கிற இதிலே அன்றோ இவர்க்குச் சம்பந்தம். நண்ணி-நான் இருந்த இடத்தே நீ வந்து கிட்டி. ஒருநாள் - பின்பு ஒருநாள் 1அச் செயல் செய்யலாகாதோ? மண்ணும் விண்ணும் மகிழ நடக்கலாவது அசுரன் முன்பேயோ? வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்கள் முன்பு நடக்கலாகாதோ? ஞாலத்தூடே நடவாய்-நடை அழகில் வாசிகண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது? 2நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என்முன்னே நடக்கலாகாதோ?

(2)

623

        ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
        சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
        கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
        சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?

   
பொ-ரை :- யுகங்கள்தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் மிகப் பலநாட்களாக உயிர்களைப் காப்பாற்றுகின்றவனே! அழகிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பலநாள் இன்னம் தளர்வேனோ?

    வி-கு :- ஞாலத்தூடு - பூமியிலே. அடியேன் உன்னைக் கூடாதே இன்னும் தளர்வேனோ? என்க, சால : மிகுதியைக் காட்டும் உரிச்சொல்.

    ஈடு :-
மூன்றாம்பாட்டு. 3உலகமே உருவமாக இருக்கிற வடிவு காட்டினது போராது; அசாதாரணமான விக்கிரஹத்தைக் கொடு வந்து காட்டவேணும் என்றார் முதற்பாசுரத்தில்; அது உமக்குக்

 

1. அச்செயல் - முன்பு மஹாபலியினுடைய யாகசாலைக்கு எழுந்தருளின
  அச்செயல். அதனை விவரணம் செய்கிறார் ‘மண்ணும் விண்ணும்’ என்று
  தொடங்கி.

2. அவன்முன் நடந்தோம், உம்முன் நடந்திலோம் என்று வெறுப்பது? ஏன்?
  அவனைக் காட்டிலும் உமக்குள்ள வாசி யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘நடையழகில்’ என்று தொடங்கி. உள்மானம் புறமானம்
  - உள்ளிற் சிவப்பும், புறத்திற் கறுப்புமான பரபாக ரசம்.

3. மேலே போந்த திருப்பாசுரங்களின் அவதாரிகைகளை நிகமித்துக்
  கொண்டு இத்திருப்பாசுரத்திற்கு அவதாரிகை இடுகிறார் ‘உலகமே
  உருவமாக’ என்று தொடங்கி. “உகந்தோறு உயிர்கள் காப்பானே”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘யுகந்தோறும்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். “காப்பானே” என்றதனைக் கடாக்ஷித்துச் ‘சுபாவமாக’
  என்கிறார்.