க
காட்டுவது ஒரு தேசவிசேடத்தே
கொடுபோய்க் காணும் என்ன, அது தன்னை இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ
என்றார் இரண்டாம் பாசுரத்தில்; அது ஒரு நாள் சற்றுப்போது காட்டாறு பெருகினாற்போலே செய்தோம்
என்ன, ‘அது ஒரு காலத்திலே நிகழ்வது’ என்ன ஒண்ணாதபடி யுகந்தோறும் இராமன் கிருஷ்ணன் முதலிய
அவதாரங்களைச் செய்து காப்பாற்றுதல் உன்னுடைய சுபாவமாக இருக்க, நான் நோவுபடக் கடவேனோ என்கிறார்.
ஞாலத்தூடே நடந்தும்
- 1எப்பொழுதும் காணக்கூடியவர்கள் முன்னே நடக்கக்கடவ நடையை, யாதானும் ஒரு காலத்தில்
வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது; குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே. 2“ஸ்ரீராமபிரான்
முன்னே நடந்து சென்றார்” என்றும், 3“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித்
திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தியுடையவராக இந்தப் பூமியில்
சஞ்சரித்தார்” என்றும் சொல்லுகிறபடியே, நடந்தும். 4வடதேசத்தினின்றும் போரப்
பாடவல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடிதொழ வேணும்’ என்று வர, ஆழ்வார் திருவரங்கப்பெருமாள்
அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து, பெருமாளை ஒரு மத்த கஜத்தைக்
கைவசப்படுத்துமாறு போலே
1. “ஞாலத்தூடே” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘எப்பொழுதும்’
என்று தொடங்கி. பாராதவர்கள் முன்னே நடந்ததற்குத்
திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘குருடர்களுக்கு’ என்று தொடங்கி.
மூடர்முன்னே பாடல்
மொழிந்தால் அறிவரோ
ஆடெடுத்த தென்புலியூர்
அம்பலவா - ஏடாகேள்
செந்திருவைப் போலணங்கைச்
சிங்காரித் தென்னபயன்
அந்தகனே நாயகனா னால்.
என்ற பாடல் இங்கே நினைக்கத்தகும்.
2. “நடந்தும்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீராமபிரான்’ என்று
தொடங்கி. “அக்ரத: ப்ரயயௌராம:” என்பது,
ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.
3. “அத தாஸரதி: வீர:
ராமோ நாம மஹாபல:
விஷ்ணு: மாநுஷரூபேண சசார
வஸுதாதலே”
என்பது, பாரதம் ஆரண்யபர்வம்,
வீமனைப் பார்த்து அநுமான் கூறியது.
4. அடியார்கட்காக
நடந்து வந்ததற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘வட
தேசத்தினின்றும்’ என்று தொடங்கி. திருமாலை-ஒருபிரபந்தம்;
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்தது. சமைந்து - முடித்து.
கணிசம் - சபதம். என்றது,
‘சொன்னபடி செய்கிறோம்’ என்று சூளுறவு
செய்வித்துக் கொண்டு என்றபடி.
|