ஏத
ஏத்தி வசமாக்கிக் கணிசம்கொண்டு,
“நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடிதொழ நெடுந்தூரமுண்டு
வந்திருக்கிறது; இவனை அழைத்துக்கொண்டு சம்பாவனை பண்ணி யருளவேணும்” என்ன, அவரைப் பெருமாள்
அருளப்பாடிட்டு, திருப்புன்னைக்கீழ் நின்றும் அவர் நின்றவிடத்தே திருக்கைத்தலத்தே எழுந்தருளி,
விண்ணப்பஞ்செய்வார்களை அருளப்பாடிட்டு, “வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம்
போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்; 1அப்படியே அன்றோ நம் இழவுகளும்
திருவுள்ளத்தேபட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.
நின்றும் -
2“கம்பீரமான வில்லைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ - தன் கணவனைக்
கொன்ற பெருமாளைத் ‘தப்பச்செய்தீரே’ என்கையன்றிக்கே, இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய
பகையைப் போக்கத் தவிர்வர்களோ? இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக்
கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து சாவாரைப்போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண்
வாலி என்றாள் அன்றோ! இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படியன்றோ கையும்
வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது. கிடந்தும் - 3“பாம்பின் உடல்போலே
இருக்கிற
1. ‘அப்படியே’ என்று தொடங்கி
அருளிச்செய்யும் வாக்கியம் பிராசங்கிகம்.
5-ஆம் பத்து 439, 440. பக். காண்க.
2. நிற்கிற நிலையாவது இன்னது
என்றும், அதுதான் கவர்ச்சிகரமாக இருக்கும்
என்னுமதனையும் அருளிச்செய்கிறார் ‘கம்பீரமான’ என்று
தொடங்கி.
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம்
ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ
பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”
என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
சுலோகத்திலேயுள்ள “ஸுபா” என்ற
சொல்லுக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘தன் கணவனை’ என்று
தொடங்கி.
கூறிய பொருளுக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘தண்ணீர்’
என்று தொடங்கி. தசரதன்பெற்ற
மரகத மணித்தடமன்றோ இவரும்.
3. “கிடந்தும்”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பாம்பின் உடல்’
என்று தொடங்கி.
|