த
திருக்கையைத் தலைக்கு
அணையாகக்கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள் கிழக்குமுகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு சமுத்திரத்திற்கு
நேர்முகமாகப் படுத்தார்” என்கிறபடியே, கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடைதானே இலங்கை
குடிவாங்க வேண்டும்படி இருக்கை. “பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று, கடல்தன்னைப்
போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று, அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு
கிடந்தாற்போலே இருக்கை; “கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.
இருந்தும் - 1“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை” என்றும், 2“பர்ண
சாலையில் எழுந்தருளியிருக்கிற சடையோடு கூடிய இராமனை” என்றும் சொல்லுகிறபடியே இருக்கை.
2“திருவயோத்தியி லிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும் படியன்றோ தனியிடத்தில்
ஓலக்கம் இருந்தபடி. அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும் கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த
ஓலக்கம் இருந்தபடி: “சுற்றிலும் நெருப்புப்போல் இருக்கிறவரை” என்கிறபடியே, நெருப்பு எரியா நின்றால்
கிட்டப்போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு.
“அஞ்சலிம் ப்ராங்முக:
க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம்
உபதாய அரிஸூதந:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.
சுலோகத்திலேயுள்ள “அரிஸூதந:”
என்ற சொல்லுக்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘கடலை’ என்று தொடங்கி. “பிரதி” என்ற
சொல்லுக்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘கடல் தன்னை’ என்று தொடங்கி.
“மஹோததே:” என்ற
சொல்லைத் திருவுள்ளம்பற்றிப் ‘போர
அளவுடைத்தாக’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ஆயின்,
இவர்
கடலோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘கருணையங்கடல்’
என்று தொடங்கி.
“கருணையங்கடல்” என்பது, கம்பராமாயணம்
வருணனை வழிவேண்டு படலம், செய். 5.
1. “இருந்தும்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘அலங்காரம்’ என்று
தொடங்கி. “உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது,
ஸ்ரீராமா. அயோத்.
16 : 8.
2. உடஜேராமமாஸீநம் ஜடாமண்டலதாரிணம்
க்ருஷ்ணாஜிநதரம் தம்து
சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித:
பாவகோபமம்”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 :
25.
இச்சுலோகத்திலுள்ள
“அபித: பாவகோபமம்” என்ற பதங்களைக்
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார் ‘திருவயோத்தியிலிருக்கும்’
என்று
தொடங்கி. அது எங்ஙனே? என்ன, விவரித்து அருளிச்செய்கிறார் ‘அந்த
ஒலக்கத்தில்’ என்று
தொடங்கி. திருவுள்ளம்பற்றிய பதங்களை எடுத்து
அருளிச்செய்கிறார் ‘சுற்றிலும்’ என்று தொடங்கி.
|