முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
419

New Page 2

கைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள் உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து, நிதி நோக்குவாரைப்போலே பெருமாளை நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனைவரும் கண் சோர்ந்த அளவிலே, பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ. அவன் நோக்குகைக்கு இத்தலை கண்செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது. நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது 1மயக்கம். அன்றோ; உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ. கோலம் திருமாமகளோடு உன்னைக் கூடாதே - 2தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப்பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும். 3“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.

    இன்னும் தளர்வேனோ - 4முன்னம் அநாதிகாலம் இழந்த நான் இன்னம் பலகாலம் இழக்கவோ? அடியேன் - 5அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கைவிடலாம் என்று இருக்கிறாயோ? இன்னும் தளர்வேனோ - 6“ஒரு மிதுநம் எனக்குப்

 

1. ‘மயக்கம் அன்றோ’ என்றது, மஹாராஜர் முதலாயினோர் பெருமாளைப்
  பாதுகாப்பதாக நினைத்தது, பக்திபாரவஸ்யமடியாக வந்த மயக்கம்
  என்றபடி.

2. பிராட்டியும் அவனும் அண்மையில் இருக்கத் தளர்வதற்குத்
  திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘தாயும் தமப்பனும்’ என்று தொடங்கி.

3. ‘உன்னைக்கூட’ என்னாமல், “கோலத்திருமாமகளோடு உன்னைக்
  கூடாதே” என்கிறது ஏன்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘வேறாகாதவள்’ என்று தொடங்கி.

4. “இன்னும்” என்றதற்கு, “சாலப்பலநாள்” என்றதனைக் கடாக்ஷித்து, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘முன்னம்’ என்று தொடங்கி.

5. “அடியேன்” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘அது கிடக்க’
  என்று தொடங்கி. என்றது, உன் ரக்ஷணத்திலே நீ நாட்டம் வையாமலே
  இழந்தாய் என்றபடி. அன்றிக்கே, சேஷத்வஞானம் உண்டான பின்பு
  ‘ஸ்வதந்திரன்’ என்று கைவிடப் போகாது என்கிறார் என்னுதல்.

6. “கோலத்திருமாமகளோடு” என்றதனைக் கடாக்ஷித்து “இன்னும்”
  என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒரு மிதுனம்’ என்று தொடங்கி.