முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
421

644

644.

        தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
        பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
        கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
        விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.

   
பொ-ரை :- சகடாசுரனுடைய உடலானது கட்டுக்குலைந்தும் நடுவே முறிந்தும் வேறாகும்படி பிளந்து உருமாயத் திருவடியால் காரியம்கொண்ட பெருமானே! பிரமன் சிவன் இந்திரன் மற்றைத்தேவர்கள் இவர்கள் கிளர்ந்து சூழ்ந்து சேவிக்க, உன் முதன்மைதோன்றும்படி நான் காண விண்மீதே ஒரு நாள் வாராய் என்க.

    வி-கு :- அசுரர்: இகழ்ச்சியின்கண் வந்தது. வீய ஆண்ட பெருமான் என்க. வீய - இறக்க. கிளர்ந்து சூழ விளங்க விண்மீதே காண ஒருநாள் வாராய் என்க. வாராய்: விதிவினை; வரவேண்டும் என்பது பொருள்.

    ஈடு :- நான்காம் பாட்டு. 1தளரக்கடவீர் அல்லீர்; உம்முடைய தளர்த்தியை நீக்கக்கடவோம்; ஆனாலும், தடைகள் கனத்திராநின்றன காணும்’ என்ன, ‘ஓம், அப்படியே; சகடாசுரனைக் காட்டிலும் வலிய தன்றோ என்னுடைய விரோதி?’ என்கிறார். ‘உன்கால் கண்டபோதே போகாதோ?’ என்கிறார். ‘அடிபடின் செய்வது என்?’ என்று சும்மெனாதே கைவிட்டோடும் அன்றோ.

    சகட அசுரர் உடல் தளர்ந்தும் முறிந்தும் வேறா பிளந்து வீய - சகடாசுரன் கட்டுக் குலையா, முறியா, உடல்வேறாகப் பிளந்து வீய; 2“ஸ்ரீராமபிரானால், அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்

 

1. “தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர்” என்பது போன்றவைகளைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘ஓம், அப்படியே’ என்று
  தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து, சகடாசுரனை அழித்த உனக்கு
  என் தடைகளைப் போக்குவதில் அருமை உண்டோ? என்பது, “திருக்கால்
  ஆண்ட” என்பதற்கு, ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘உன்கால்’ என்று
  தொடங்கி. கால் - காற்றும், திருவடியும். ‘அடிபடின்’ என்பதற்கு,
  திருவடிகள் படின் என்பது நேர்பொருள். ‘சும்மெனாதே’ என்பது,
  பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 3.

2. இங்ஙனம் ஆனதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘ஸ்ரீ ராமபிரானால்’
  என்று தொடங்கி.

  “சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம்
   பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”

 
என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.