முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
423

New Page 1

    பெருமானே - 1அன்று சேஷியை உண்டாக்கின உனக்கு, இன்று சேஷவஸ்துவை உண்டாக்குகை பெரிய பணியோ? 2அவன் பிரகாரியானால், பிரகாரமாயுண்டாவது அன்றோ இது. பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் கிளர்ந்து சூழ விளங்க ஒருநாள் காண விண்மீதே வாராய் - 3“கும்பிடு நட்டமிட்டாடி” என்கிறபடியே, வேறு பிரயோஜனத்தைக் கருதாதவரைப் போலே, தம் வசம் அற்றவர்களாய்க்கொண்டு பிரமன் சிவன் முதலானோர்களால், பிரதாநரோடு பிரதான மில்லாதாரோடு வாசியறக் கிண்ணகம் சுழித்தாற்போலே சூழச் சூழப்பட்டு, 4இருட்டில் விளக்குப்போலே 5“ஒளிகளின் திரள்” என்கிறபடியே தேஜஸ்ஸே வடிவான திருமேனியைக் கொண்டு, ஒருநாள் யானைக்கு வந்து தோற்றினாற்போலே, ஆகாச மடங்கலும் இடம் அடைக்கும்படி வந்து தோற்றவேணும் என்கிறார். இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார். ‘நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார். 6நீள்நகர் நீள் எரி வைத்தருளாய் என்கிறேனோ என்பார் ‘காணவாராய்’ என்கிறார். இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண்மீதே’ என்கிறார்.

(4)

645.

    விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
    மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
    எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
    உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!

 

  யானது அடியார்களுடைய செல்வமாகையாலே, அந்தத் திருமேனிக்கு
  வந்த ஆபத்தைப் போக்குகையே அடியார்களுடைய ஆபத்தைப்
  போக்கியவாறு என்றபடி.

1. “பெருமாள்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அன்று’ என்று
  தொடங்கி.

2. பெரிய பணி அன்றோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அவன் பிரகாரியானால்’ என்று தொடங்கி.

3. “கும்பிடுநட்டமிட்டாடி” என்பது திருவாய். 3. 5 : 4.

4. “விளங்க” என்கையாலே, ‘இருட்டில் விளக்குப்போலே’ என்கிறார்.
  இதனால், பிரமன் சிவன் முதலாயினோர்களுடைய ஒளி இருளுக்குச்
  சமம் என்பது போதரும்.

5. “தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா 1. 9 : 67.

6. “நீள்நகர்” என்பது, திருவிருத்தம், 92.