கடல
கடல்சேர்ப்பாய்-கால்
நடை தந்து போகவல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தபடி.
1‘விண்மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார், ‘மலைமேல் நிற்பாய்’
என்று நிலையில் வாசி சொன்னார். ‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை
அழகு நிரம்பப்பெற்றது. மண்மீது உழல்வாய்-அவ்வளவு போகமாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து
அவர்கள் கண்வட்டத்தில் திரியுமவனே! 2“தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்புதான்
இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடற்றாலும்” என்கிறபடியே, அநுகூலராய்க் கட்டுவாரும் பிரதிகூலராய்க்
கட்டுவாருமான சம்சாரமாதலின் ‘உழல்வாய்’ என்கிறார்.
இவற்றுள் எங்கும்
மறைந்து உறைவாய் - 3கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண
ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே! சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே
விழியேன்’ என்றால், தான் மறைய நின்று அவன் உகந்தாரைக்கொண்டு ரக்ஷிக்கும் தாயைப்போலே.
4“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகுமுறுகு என்றால், அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி
அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி. எண்மீது இயன்ற புற அண்டத்தாய் - எண்ணுக்கு
1. “இருப்பாய், நிற்பாய்,
சேர்ப்பாய்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘விண்மீதிருப்பாய்’ என்று தொடங்கி.
2. அவதாரம் எடுத்துச் சஞ்சரித்தலைத்
‘திரிவாய்’ என்னாமல், “உழல்வாய்”
என்று துக்கம் தோற்றச் சொல்லலாமோ? என்ன,
‘தாம்பால், என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது, பெரிய திருவந். 18.
பிரதிகூலர்
- இங்கே, காளியன் என்னும் பாம்பு.
3. “மறைந்து” என்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘கண்ணாலே காணில்’
என்று தொடங்கி. சிவிட்கு என்னும் -
கோபிக்கும்; அல்லது,
அசூயைப்படும். மறைந்து உறைதல் உபகாரம் என்னுமதனை உலக
திருஷ்டாந்தத்தாலே
காட்டுகிறார் ‘சிற்றின்பத்திலே’ என்று தொடங்கி.
4. திருஷ்டாந்தத்தாலே
பலித்த பொருளைத் தார்ஷ்டாந்திகத்திலே
காட்டுகிறார் ‘அதாவது’ என்று தொடங்கி. நறுகுமுறுகு -
பொறாமை;
ஒலிக்குறிப்பு.
|