New Page 1
மேலே இருக்கிற மற்றுள்ள
அண்டங்களிலும் 1இப்படி வசிக்கின்றவனே! 2“இப்படிப்பட்ட அண்டங்கள்
கோடி நூறு கோடியாக இருக்கின்றன” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம். எனது ஆவியுள் மீது ஆடி - 3என்
மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து. அன்றிக்கே, என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து
என்னுதல். உருக்காட்டாதே ஒளிப்பாயோ - வடிவுகாணப்பெறாவிட்டால், 4மறந்து பிழைக்கவும்
பெறாது ஒழிவதே. 5குணஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவுகாணாது ஒழிந்தாலும்
தரிக்கலாவது?
(5)
646
பாயோர் அடிவைத்து
அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா
உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக்
காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய்
உலகில் திரிவேனோ?
பொ-ரை :- ஒரு திருவடியைப் பரப்பிக் கடலால் சூழப்பட்ட
உலகங்கள் எல்லாம் அத் திருவடியின் கீழே ஆம்படி தாவி அளந்து, மற்றொரு திருவடியால் மேல்
உலகங்கள் எல்லாவற்றையும் தடவின மாயோனே! உன்னைக் காணும்பொருட்டு வருந்தி எல்லாக் காலத்திலும்
தீயின் அருகில் சேர்ந்த மெழுகைப் போன்று உலகத்தில் திரியக் கடவேனோ?
1. ‘இப்படி வசிக்கின்றவனே’ என்றது, பரத்துவம் முதலான ஐவகை
வடிவாய்க்கொண்டு வசிக்கின்றவனே
என்றபடி.
2. அண்டங்கள் பலப்பல என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார்
‘இப்படிப்பட்ட’ என்று தொடங்கி.
“அண்டாநாம் து ஸஹஸ்ராணாம்
ஸஹஸ்ராணி அயுதாநி ச
ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 :
97.
3. “எனது ஆவிமீது” என்பதற்கு,
இருவகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார். முதற்பொருள், “மீது” என்பது, மிகுதியாய்,
குறைவறுதியைச்
சொல்லுகிறது. இதனையே, ‘என்மனத்தினுள்ளே’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார். இரண்டாவது
பொருள், “மீது” என்பது,
மேலாய், புறத்திலே என்றபடி. இதனையே, ‘என் ஆத்மாவுக்குள்ளும்’
என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
4. “ஆவியுள்மீதாடி” என்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘மறந்து’ என்று
தொடங்கி.
5. வடிவு காணாவிட்டால்
குணங்களின் அநுசந்தானத்தாலே தரிக்க
ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘குண
ஞானத்தாலே’ என்று தொடங்கி.
|