பகவத
பகவத்குணங்கள் நடையாடாதே
ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ - முன்பு இழந்தது
போராதோ? 1“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத்குணங்கள் நன்று” என்றும் அறிந்த
பின்பும் கெடுப்பாயோ? 2“நினைவு கெடுவதனால் புத்தி கெடுகிறது, புத்தி கெடுவதனால்
நாசத்தை அடைகிறான்” என்பது ஸ்ரீகீதை. பிறிது ஒன்று அறியா அடியேன் - வேறு கதியில்லாதவனாய் வேறு
ஒருவர்க்கு உரியன் அல்லாதவனாய் இருக்கிற என்னுடைய, ஆவி திகைக்க - மனம் கலங்கும்படி. கிறிசெய்து
என்னைப்புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே?
(8)
649
ஆவி திகைக்க
ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப்
பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம்
கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும்
காலம் இன்னம் குறுகாதோ.
பொ-ரை :- மனம் கலங்கும்படியாக ஐந்து இந்திரியங்களும்
வருத்துகின்ற பலவகையான சிற்றின்பத்தை எனக்கு நீ காட்டிப் பாவியேனை அழிக்க நினைக்கின்றாயோ?
பூலோகத்தை அளந்துகொண்ட தாமரை போன்ற திருவடிகட்கு அழைத்துக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?
என்கிறார்.
வி-கு :-
ஐவர் ஆவி திகைக்கக் குமைக்கும் சிற்றின்பம்
என்க. ஐவர்: இகழ்ச்சிக் குறிப்பு. ஆவி - மனம். சிற்றின்பம் பல நீ காட்டி என்க. வையம் தாவிக்
கொண்ட தாமரை என்க. தாமரை - உருவகம்.
ஈடு :-
ஒன்பதாம்பாட்டு. 3உம்மை இங்குக் கெடுத்தது
என்? என்ன, கண்ட காட்சியிலே இழுத்துக் கொள்ளக்கடவனவான விஷயங்கள் பரிமாறுகிற இடத்தே வைத்தாயாகில்,
இனி, கெடுக்கை
1. முன்னைய நிலையைக் காட்டிலும்
இப்போது வந்த விசேஷம் யாது?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சம்சாரம்’ என்று தொடங்கி.
2. விஷயங்கள் நடையாடுகிற
சம்சாரத்தே வைத்தால் கேடு ஏது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நினைவு கெடுவதனால்’
என்று
தொடங்கி.
“த்யாயதோ விஷயாந்
பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம:
காமாத் க்ரோத: அபிஜாயதே”
“ஸ்மிருதி ப்ரம்சாத் புத்திநாச:
புத்தி நாசாத் ப்ரணச்யதி”
என்பன, ஸ்ரீ கீதை. 2. 62 : 63.
3. “பல நீ
காட்டிப் படுப்பாயோ” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘உம்மை
இங்கு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
|