முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
435

1ந

1நாட்டார் ‘காணாவிடில் பிழையோம்’ என்று இருக்கிற விஷயம் இவர்க்குக் கண்ட மாத்திரத்திலேயே மோஹிக்கும் படியாக இருக்கிறதன்றோ; ஆகையால், ‘காட்டிப் படுப்பாயோ’ என்கிறார். 2அசுணமா என்று சில பறவைகள் உள்ளன; அவை பிடிகொடா ஒன்றுக்கும்; அவற்றைப் பிடிக்க நினைத்தார் முற்படப் பாடுவார்கள்; அதுகேட்டு நெஞ்சுநெகிழும்; பின்பு பறையை அடிப்பார்கள்; இதன் வன்மையாலே பட்டுக் கிடக்குமாம். அதுபோலே, இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி. இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார். 3நெடுநாள் அநுபவித்துப் போந்தாலும் கணக்க இருந்த அன்று ‘நாம் இன்னது அநுபவித்தோம்’ என்று நினைப்பதற்கு ஒன்று இன்றிக்கே இருக்கும் அன்றோ; 4இங்ஙனே இருக்கச் செய்தேயும் அவற்றில் ஆசைசெலுத்துவது பாவத்தின் மிகுதி அன்றோ.

    தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ - 5வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார். ‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக்கட்டவல்லன்

 

1. கண்ட அளவிலேயே அது நாசத்திற்குக் காரணமாம் என்கிறதனை
  அநுசந்தித்து வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘நாட்டார்’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

2. மற்றைய விஷயங்களில் சென்று சேர்ந்தால்தானே அவை நாசத்திற்குக்
  காரணமாம்; கண்டமாத்திரத்திலேயே அவை நாசத்திற்குக் காரணமாமோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அசுணமா’ என்று தொடங்கி.

  “மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
   பறக்கும் பதங்கமும் போலைவ ராற்கெடும் பாதகரே”

  என்பது, திருவேங்கடத்தந்தாதி, 28.

  “பறைபட வாழா அசுணமா” என்பது, நான்மணிக்கடிகை.
   இதனைப் பறவை என்பர் ஒரு சாரார்; விலங்கு என்பர் மற்றொரு சாரார்.

3. “சிற்றின்பம்” என்றதனைக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘நெடுநாள்’ என்று தொடங்கி.

4. “பாவியேனை” என்றதனைக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘இங்ஙனே’ என்று தொடங்கி.

5. ‘வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே’ என்று தொடங்கும்
  வாக்கியத்துக்குக் கருத்து, “கூவிக்கொள்ளும் காலம்” என்பது போன்ற
  கால எல்லையைக் கேட்கிற பாசுரத்தாலே “தடந்தாமரைகட்கே” என்று
  திருவடிகளே அடையத்தக்கது என்று அறுதியிடுகிறார் என்றபடி.