முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
436

என

என்னும் சத்தியோகம் கூறியபடி. பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி. இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது. இதனால் பிராப்யம் சொல்லுகிறது. ‘கூவிக்கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது. ‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது. 1இதர விஷயங்களின் கான்சி முடியும்படியாய், உன் திருவடிகளின் இனிமை அறிந்து விடமாட்டாத அளவு பிறந்து பின்பு இன்னம் தாழ்க்குமத்தனையோ? 2பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க, ‘கூவிக்கொள்ளும்காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பலகால் சொல்ல, இதனைக்கேட்டுச் சீயர் அழ, ‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்? அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

(9)

650

        குறுகா நீளா இறுதி கூடா எனைஊழி
        சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
        மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
        சிறுகா லத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.


    பொ-ரை :-
மாயோனே! இயல்பாகக் குறைவதும் பெருகுவதும் இல்லாததும், முடிவு இல்லாததும், எத்துணைக் கற்பங்கள் சென்றாலும் கால வேறுபாட்டினால் குறைவதும் பெருகுவதும் இல்லாததும் அளவு இல்லாததுமான சிற்றின்பமாகிய ஆத்ம அநுபவம் சேர்ந்தாலும், தெளிந்து பார்க்குமிடத்து மறுபடியும் ஒருகாலம் இல்லாமல் உனக்கே கைங்கரியத்தைச் செய்கின்ற சிறிய காலத்தை அது ஒக்குமோ?

    வி-கு :- முதல் இரண்டு அடிகளில் கைவல்யம் கூறப்படுகிறது. குறுகா, நீளா, கூடா, சிறுகா என்பன; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்; குறுகா இன்பம் எனத் தனித்தனியே கூட்டுக. அந்தோ: இரக்கத்தின்கண் வந்த இடைச்சொல்,

 

1. “இன்னம்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இதர விஷயங்களின்’
  என்று தொடங்கி.

2. இப்படிக் கூப்பிட்ட பேர் உளரோ? என்ன, ‘பிள்ளானுடைய’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.