முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
438

ஆத

ஆத்ம அநுபவ சுகத்தை அடைந்தாலும். மறுகால் இன்றி - 1பகவானுடைய அநுபவமானது ஒரு கால் அநுபவித்தால் மற்றைப்போது இன்றிக்கே இருப்பது. மாயோன் - மீண்டு இன்றிக்கே ஒழிந்தாலும் விடொண்ணாத கல்யாணகுணயோகம் சொல்லுகிது. உனக்கே ஆள் ஆகும் சிறு காலத்தை உறுமோ - ‘உன்திருவடிகளில் அடிமையே புருஷார்த்தம்’ என்று இருக்குமது, 2மறுத்து இன்றியிலே இருப்பது, அதுதான் கணநேரமாவது; இங்ஙனே இருந்தாலும் அளவில் இன்பம் சேருகை உறுமோ? இதனைப் பார்க்க. அந்தோ - பர்த்தத்துக்கும் பரமாணுவுக்கும் இருந்த வேற்றுமையைச் சொல்லும்படி ஆவதே! தெரியிலே - தோற்றிற்றுச் சொல்லின் செய்யலாவது இல்லை; ஆராய்ந்து சொல்லுமன்று இங்ஙன் அல்லது இல்லை. 3இந்தப் பொருளை உபதேசிக்கவேண்டுவது ஆவதே!

(10)

651.

        தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
        உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
        தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
        உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.
   
   
பொ-ரை :- தெளிதல் நினைத்தல் தியானித்தல் ஆகிய இவற்றால் அறியமுடியாத திருமாலுக்கு உரிமைப்பட்ட தொண்டர்களுக்குத் தொண்டரான ஸ்ரீ சடகோபராலே தெளியும்படியாகச் சொல்லப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும் உலகத்தையெல்லாம் உண்டவனான சர்வேசுவரனுக்கு உரிமைப்பட்ட தொண்டராகச் செய்யும்.

 

1. “உனக்கே ஆளாகும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிப் ‘பகவானுடைய
  அநுபவமானது’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். “மறுகால்”
  என்றதற்குப் பொருள், ‘ஒருகால்’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. ‘மற்றைப்போது இன்றிக்கே இருப்பது’ என்று மேலே அருளிச்செய்த
  வாக்கியத்தின் விவரணம், ‘மறுத்தின்றியிலே இருப்பது’ என்பது.
  “சிறுகாலம்” என்றதன்பொருள், ‘அதுதான் கணநேரமாவது’ என்பது.

3. “அந்தோ” என்றதற்கு, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘இந்தப்
  பொருளை’ என்று தொடங்கி.

 
    மாயோன், உனக்கே ஆளாகும் மறுகால் இன்றி, சிறுகாலத்தை, குறுகா
  நீளா இறுதிகூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம்
  சேர்ந்தாலும், தெரியில் உறுமோ! அந்தோ! என்று கூட்டுக. உறுமோ -
  ஒப்பாகுமோ.