என
என்னில், ஈத்ருஸேஜநே -
அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை. இதுக்கு 1இங்குள்ளாருடைய சம்பந்தமே
பலியாநின்றதே. 2ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில்
சரணம் புகுகிறார்.
652.
உலகம் உண்ட
பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி!
நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற
திருவேங் கடத்தெம் பெருமானே!
குலதொல் அடியேன்
உனபாதம் கூடு மாறு கூறாயே.
பொ-ரை :- பிரளயகாலத்தில் உலகத்தை எல்லாம் புசித்த
பெரிய திருவாயினையுடையவனே! அழிதல் இல்லாத கீர்த்தியையுடைய அம்மானே! எப்பொழுதும் நிலைபெற்றிருக்கின்ற
சுடர்கள் சூழ்ந்திருக்கின்ற ஒளியையுடைய மூர்த்தியே! நெடியோனே! அடியேனுக்கு அரிய உயிராக இருப்பவனே!
உலகத்திற்கெல்லாம் திலதம் போன்று நிற்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே!
தொன்றுதொட்டே வருகின்ற தொண்டக்குலத்திலே பிறந்த அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சேரும்வகை
கூறியருள வேண்டும்.
வி-கு :-
உலகுக்குத் திலதமாய் என் மாற்றுக.
இத் திருவாய்மொழி
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஈடு :-
முதற்பாட்டு. 3உன்னை ஒழிய வேறுகதி இன்றிக்கே
இருக்கிற என்னை உன் திருவடிகளிலே சேரும்படி செய்தருள வேண்டும் என்கிறார்.
உலகம் உண்ட
பெருவாயா - 4தேவர் திருவடிகளைக் கிட்டாத அன்று எனக்கு உண்டான தளர்த்தி, பத்துப்
பிரளய ஆபத்தைப்
1. ‘இங்குள்ளாருடைய’ என்றது,
கடல், இராவணன் முதலியோரைக்
குறித்தபடி.
2. சரணம்புகுவது, பத்தாம்
திருப்பாசுரத்திலே அன்றோ? நடுவே உள்ள
ஒன்பது திருப்பாசுரங்களுக்கும் பயன் என்? என்ன, அதற்கு
விடை
அருளிச்செய்கிறார் ‘ஒன்பது பாசுரங்களாலும்’ என்று தொடங்கி.
3. “குலதொல் அடியேன்” என்பது
போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
4. உலகத்துக்குப்
பிரளயத்தால் ஆபத்து வந்தது காப்பாற்றினோம்; உமக்கு
ஆபத்து ஒன்றும் இல்லையே? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்
‘தேவர் திருவடிகளை’ என்று தொடங்கி.
|