முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
45

நின்றதே உங்கள் முயற்சி! 1கடல் கடக்கும்போது ஒருவடிவாய், எதிரிகள் படை வீட்டில் புகும்போது ஒருவடிவாய், இருக்கவேண்டாதபடி காணும் இதனுடைய வடிவின் சிறுமை இருக்கிறபடி என்பாள் ‘சிறுபூவாய்’ என்கிறாள். ஒண்மை - கண்டுகொண்டிருக்க வேண்டும் அழகு.

    செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்-2அவன்பாடு செல்லவேண்டாதே, போகஸ்த்தானமே அமைந்திருக்கை. அன்றிக்கே, வாராமை அவன் குற்றம் அன்று, நிலப்பண்பு கண்டீர்கோள்என்னுதல். என்றது, காற்கட்டு ஒன்று இரண்டாகில் அன்றோ வரலாவது, அவை நாலுபாடும் சூழ்ந்து நிற்க அவனாலே வரப்போமோ என்றபடி. 3ஒரு திக்குக்கு ஒன்றே அமைந்திருக்கிறது காணும். பெருந் தண் தாமரைக் கண் - அநுபவிக்கின்றவர்கள் அளவல்லாதபடி பெருத்துச் சிரமஹரமாய், மலர்த்தி, செவ்வி, குளிர்த்தி, வாசனை தொடக்கமானவற்றை யுடைத்தாயிருக்கை. பெரு நீண் முடி - உபயவிபூதிகட்கும் கவித்த முடியையுடையவன் என்னுதல். அன்றிக்கே, உபய விபூதிகட்கு முடையவனாயிருத்தலுக்கு மேலே அன்றோ, அவ் வூர்க்குக் கடவனாயிருத்தல் என்னுதல். அன்றிக்கே, 4“எந்த இராமனுக்கு அந்த ஜானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராமன் பெருமை அளவிட இயலாது” என்று கொண்டு இவள்தன்னைத் தோற்பித்துச் சூடின முடி என்னுதல். பெரு நீள் - பெரிய வளர்த்தி. நால் தடம் தோள் - அவளை அணைந்து அத்தாலே கல்பகதரு பணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்கள். அன்றிக்கே, நாலாய்ச் சுற்றுடைத்தாயிருக்கிற திருத்தோள்கள் என்னலுமாம். கரும் திண் மா முகில் போல் திருமேனி - கறுத்துத் திண்ணியதாயிருப்பதொரு மஹாமேகம்போலேயாயிற்று வடிவு இருப்பது. அன்றிக்கே, சிரமத்தைப் போக்கக்கூடிய நிறத்தை

 

1. ‘கடல் கடக்கும்’ என்று தொடங்கும் வாக்கியம், திருவடிக்கும் இதற்குமுள்ள
  வேறுபாட்டினைக் காட்ட வந்தது.

2. ‘அவன்பாடு செல்ல வேண்டாதே’ என்றது, அவன் அவயவங்கள் அளவும்
  போக வேண்டாதே என்றபடி.

3. “செருந்தி ஞாழல் மகிழ் புன்னை” என்ற ஒருமைக்கு, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘ஒரு திக்குக்கு’ என்று தொடங்கி.

4. “அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா
   நத்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம் வநே”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.