முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
456

எனக

எனக்குச் சொரூபலாபம் கண்டாய். 1அவன் ஒரு வார்த்தை அருளிச்செய்ய, தளப்பம் தீரும் அன்றோ இவர்க்கு. 2“மாசுச: - துக்கப்படாதே” என்னவேணும்.

(1) 

653.

    கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம்
    சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
    சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
    ஆறா அன்பில் அடியேன்உன் னடிசேர் வண்ணம் அருளாயே.

   
பொ-ரை :- கொடிய வலிய அசுரர் கூட்ட முழுதும் கூறு கூறு ஆகிச் சாம்பலாகி மண்ணோடு மண்ணாகும்படியாகச் சீறி, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற அழகிய சக்கரத்தை வலக்கையில் தரித்திருப்பவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சேறு பொருந்திய சுனைகளிலே தாமரை மலர்கள் சிவந்த நெருப்பினைப்போன்று மலர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! குறைவுபடாத அன்பினையுடைய அடியேன் உனது திருவடிகளைச் சேரும்படி திருவருள் புரியவேண்டும்.

    வி-கு :- அசுரர் குலம் எல்லாம் கூறு ஆய் நீறு ஆய் நிலனாகிச் சீறா எரியும் திரு நேமி என்க. ‘ஆகி’ என்பதனை ‘ஆக’ எனத் திரிக்க. ஆகச் சீறி எரியும் என்க. அன்பில் - அன்பினையுடைய.

    ஈடு :-
இரண்டாம்பாட்டு. 3‘கூடக்கடவீர்; அதற்கு ஒரு குறை இல்லை; ஆனாலும், தடைகள் கனத்து இராநின்றனவே’ என்ன, உன் கையில் திருவாழி இருக்க, நீ இங்ஙன் சொல்லலாமோ? என்கிறார்.

    கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம் சீறா எரியும் திருநேமி வலவா - 4நீ கைகழலா நேமியானாய்

 

1. “கூறாய்” என்கிறாரே, வார்த்தை மாத்திரம் போதியதாமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘அவன் ஒருவார்த்தை’ என்று தொடங்கி.
  தளப்பம் - தளும்புதலும், அலைச்சலும்.

2. கூறவேண்டிய வார்த்தையை அருளிச்செய்கிறார் “மாசுச:” என்று. “மாசுச:”
  என்றால், “ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ:” என்று இருக்கலாம் என்றபடி.

3. “திருநேமி வலவா!” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

4. “கூறாய். . . . . .நேமிவலவா!” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘நீ கை கழலா’ என்று தொடங்கி.