என
என்ன, ‘சீறா எறியும்’
என்கிறார். என்றது. இவை முடிந்துபோகச் செய்தேயும் கொண்ட 1குதை மாறாமல், இரை
பெறாத பாம்புபோலே ஒளி விடாநிற்கும். திரு நேமி வலவா - 2நீ வலவருகே திருவாழியைத்
தரித்திருக்க, நான் துக்கத்தைத் தரித்திருப்பதே!
தெய்வக் கோமானே
- 3இப்படி அடியார்களுக்காக வந்து படுகிறவன் ஆள் இல்லாதவன் அல்லன் கண்டீர்! அயர்வறும்
அமர்கள் அதிபதி கண்டீர். 4அங்குக் கையும் திருவாழியுமான அழகை அநுபவிப்பாரே அன்றோ
உள்ளது; 5இருதுண்டமாக விடுவதற்கு ஆள் உள்ளது இங்கே அன்றோ. இரண்டு விபூதியையும்
ஆளுவது திருவாழியாலே. ‘அகல்விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’ என்கிறபடியே,
6அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும். அங்குக் கூர்மை குமர்
இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும். அங்குள்ளார்க்குக் கைமேலே ஜீவனமாயிருக்கும்; இங்குள்ளார்க்கு
விரோதியைப்போக்கிப் பின்னையாயிற்று ஜீவனம் இடுவது. அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே;
1. குதை - உத்யோகம்; முயற்சி.
2. ‘நீ கைகழலா நேமியானாய்’
என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
பொருள், “திருநேமிவலவா!” என்றதனை நோக்கிச்
சொன்னோம்
என்னுமிடம் தோற்ற அருளிச்செய்கிறார் ‘நீ வலவருகே’ என்று
தொடங்கி.
3. “தெய்வக் கோமானே!”
என்பதற்குப் பிரயோஜனம் அருளிச்செய்கிறார்
‘இப்படி’ என்று தொடங்கி.
4. “தெய்வக் கோமான்”
என்பதற்கு, திருநேமிவலவனான தன்மையை
நித்தியசூரிகளை அநுபவிப்பிக்குமவன் என்று வேறும்
ஒருபொருள்
அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, அருளிச்செய்கிறார் ‘அங்குக்
கையும்’ என்று தொடங்கி.
5. ஆயின், அங்கு விரோதிகள்
இல்லையோ? என்ன, இல்லை என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இருதுண்டமாக’
என்று தொடங்கி. இதனால் பலித்த பொருளையும், அப்பொருளுக்குப்
பிரமாணமும் காட்டுகிறார்
‘இரண்டு விபூதியையும்’ என்று தொடங்கி.
‘அகல்விசும்பும்’ என்பது, திருவிருத்தம், 33.
6. ஆளும்
பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘அழகாலே’ என்று தொடங்கி.
அதனை விவரணம் செய்கிறார் ‘அங்குக்கூர்மை’
என்று தொடங்கி.
ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘அங்குள்ளார்க்கு’ என்று தொடங்கி.
இவ்விரண்டுக்கும்
காரணத்தை அருளிச்செய்கிறார் ‘அங்குள்ளார்’ என்று
தொடங்கி. ‘அவன் கையே பார்த்திருக்கையாலே’
என்பதற்கு,
அவன்கையும் திருவாழியுமான அழகைப் பார்த்திருக்கையாலே என்றும்,
தம்முடைய முயற்சியைவிட்டு
அவன் கை பார்த்திருக்கையாலே என்றும்
இருவகையாகப் பொருள் கொள்க.
|