முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
460

இவர

இவர்களுக்கு அது இல்லையே. என்? நாம் இப்போது சேய்மையில் உள்ளோம் அல்லோமோ? என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் மேல் : சேறு ஆர் சுனைத்தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே - சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப்போலே மலராநிற்கும். 1எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது; 2நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது. ஆறா அன்பில் அடியேன் - 3இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி. 4சுனைகளில் நீர்வற்றில் ஆயிற்று இவருடைய அன்பு வற்றுவது. மயர்வற மதி நலம் அருள அது அடியாக வந்த அன்பு அன்றோ. 5ஊற்றுடைத்தே. 6கிரமப் பிராப்தி பற்றாதபடியான பிரேமம் அன்றோ. உன் அடி சேர் வண்ணம் அருளாயே - உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி

 

1. “சேறார்சுனைத் தாமரை செந்தீ மலரும்” என்கிறவளுடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘எண்ணெயாலே’ என்று தொடங்கி.
  நமிநந்தியடிகள் நாயனார், திருவாரூரில் தியாகராஜப்பெருமான்
  சந்நிதியில் நீரால் விளக்கிட்டதாகப் பெரியபுராணம் கூறும்.
 ஆராய்க்
  தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்

  பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்
  ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
  நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே.

  என்ற திருநாவுக்கரசு நாயனார் தேவாரமும் இங்கு அறிதல் தகும்.

2. நீராலே எரியும் விளக்கும் உண்டோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘நீரிலே’ என்று தொடங்கி.

3. “ஆறா அன்பில்” என்று விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘இவர்க்கு’ என்று தொடங்கி.

4. “சேறார்சுனை” என்றதன்பின், “ஆறாஅன்பில்” என்றதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘சுனைகளில்’ என்று தொடங்கி. அன்பு
  வற்றாமைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘மயர்வற’ என்று
  தொடங்கி.

5. “சுனை” என்றதனோடு சேர்த்தியாகச் சொல்லுவதற்குச் சுனைவற்றாதோ?
  என்ன, ‘ஊற்றுடைத்தே’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. “ஆறா அன்பில்” என்பதற்கு நித்தியமான அன்பு என்று மேலே
  பொருள் அருளிச்செய்தார். இங்கு, “மெய்யமர் காதல்” என்கிறபடியே,
  அவனை அநுபவித்தால் ஒழிய ஆறாத அன்பு என்று வேறு ஒருகருத்து
  அருளிச்செய்கிறார் ‘கிரமப்பிராப்தி’ என்று தொடங்கி.