என
என்று அன்றிக்கே நினைத்த
மாத்திரத்தாலே தானே வந்து புகுந்து இனிதாகை. 1உள்ளுந்தொறும் தித்திக்கும் அமுது
அன்றோ.
இமையோர் அதிபதியே
- 2மதுவிரதம் போலே, இந்த அமிருதமே ஜீவனமாக இருக்குமவர்கள். தெள் 3நல்
அருவி மணிபொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே - தெளிந்து நன்றான அருவிகளானவை விலக்ஷணமான
மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும் கொழித்து ஏறட்டுகிற திருமலையிலே நின்றருளுகிற
சர்வேசுவரனே! அண்ணலே - திருமலையிலே வந்து நின்று எனக்கு உன் சேஷித்வத்தை 4உதறிப்படுத்தவனே!
5இமையோர் அதிபதியாயிருந்து வைத்து வண்ணமருள்கொள் அணிமேக வண்ணனாய் மாய அம்மானாய்த்
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க்கொண்டு, எண்ணம்
புகுந்து தித்திக்கும் அமுதே என்கிறார். உன் அடிசேர அடியேற்கு ஆஆ என்னாய் - 6கிட்டி
நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்! உன் திருவடிகளை அடையும்படி வேறுகதி
இல்லாத எனக்கு ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருளவேண்டும். உன்னடி அன்றோ? 7உபாயமுமாய்
உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.
(3)
655.
ஆவா என்னாது உலகத்தை
அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழைபொழிந்த
சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள்
முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள்
அருவினையேன் பொருந்து மாறு புணராயே.
1. நினைத்தவளவில் தித்திக்கும்
அமுது என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘உள்ளுந்தொறும்’ என்று தொடங்கி.
2. “தித்திக்கும் அமுதே”
என்றதன்பின், “இமையோர் அதிபதியே”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘மதுவிரதம்’ என்று
தொடங்கி.
3. “நல்” என்பதனை,
“மணி” முதலானவற்றிற்கும் கூட்டுக.
4. ‘உதறிப்படுத்தவனே’ என்றது,
ஐயம்அறச் செய்தவனே,
உறுதிப்படுத்தியவனே என்றபடி.
5. அவதாரிகையில்
அருளிச்செய்ததற்குத் தகுதியாக அந்வயம் காட்டுகிறார்
‘இமையோர் அதிபதியாய்’ என்று தொடங்கி.
6. “அண்ணலே உன்னடிசேர”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘கிட்டிநின்று’ என்று தொடங்கி.
7. ‘உன்னடியன்றோ’
என்றதனை விவரணம் செய்கிறார் ‘உபாயமுமாய்’
என்று தொடங்கி.
|