New Page 1
பொ-ரை :-
ஐயோ! ஐயோ! என்று இரங்காமல் உலகத்திலுள்ளாரை
வருத்துகின்ற அசுரர்களுடைய வாழ்நாளின் மேலே, நெருப்பினை வாயிலேயுடைய பாணங்களை மழையைப்போன்று
பொழிந்த வில்லையுடையவனே! திருமகள் கேள்வனே! தேவனே! தேவர்களும் முனிவர் கூட்டங்களும்
விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! போக்கற்கு அரிய வினைகளையுடைய
அடியேன், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பொருந்துமாறு கற்பிக்கவேண்டும்.
வி-கு :-
“வாணாள்மேல் தீவாய் வாளி பொழிந்த” என்றது,
அவர்களைக் கொன்றமையைக் குறித்தபடி. பூவார்கழல்கள் - பூக்கள் நிறைந்திருக்கின்ற திருவடிகள்
என்னலுமாம்.
ஈடு :-
1உன்னை
அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை; ஆன
பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டுதரவேணும் என்கிறார்.
2நஞ்சீயரை,
நம்பிள்ளை ஒருநாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள, “நான் அறிகிலேன்; இனி, நான்காவது
உபாயந்தான் பகவானேயாயிருக்க, 3ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால்
ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப்போல, அவனுக்கும் அவ்
1. “பொருந்துமாறு புணராயே”
என்றதிலே நோக்காக அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘தனியே ஒருசாதனம் கண்டுதரவேணும்’ என்றதற்குக்
கருத்து, நான் செய்த பாவங்கட்கு நீ வைத்துள்ள நரகங்கள் போரா;
எனக்கு என்ன ஒரு நரகம் கல்பிக்கவேண்டும்
என்றால், உண்டாக்க
வேண்டும் என்று பிரார்த்திக்கிறது அன்றே? அருட்பெருங்கடலாய்
பேராற்றலையுடையவனான
நீ அதனைப் போக்கவேண்டும் என்பது
கருத்தாமாறு போன்று, சித்தோபாயமான நீயே காக்கவேண்டும்
என்பது.
‘ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை’ என்கையாலே, கர்ம ஞான பக்திகள்
போன்று, சித்தோபாயமும்
சாதனமன்று என்று தோற்றினாலும்,
சித்தோபாயமான நீயே விரைவில் செய்யவேண்டும் என்று பதற்றம்
சொல்லுகிறது.
2. இந்த விஷயத்திலே
‘நான்காவது உபாயமான ஈசுவரனை ஒழிய வேறு
உபாயம் இல்லை’ என்கைக்குச் சம்வாதமாக ஐதிஹ்யம்
அருளிச்செய்கிறார் ‘நஞ்சீயரை’ என்று தொடங்கி.
3. ‘ஆகாயம்
என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று
உண்டு என்று சொல்லுவாரைப்போலே’ என்றது,
“தத்ராபிதஹரம்”
என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி, “தஸ்மின் யதந்த:”
என்கிறபடியே, அவனுக்கு
அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று
சொல்லுவாரைப்போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர்,
சைவர்.
நாலாம் பத்து, பக். 386. காண்க.
|