முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
465

வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ, அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச்செய்தார். “ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச்செய்யும்போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தரவேணும் என்கிறார்’ என்று அருளிச்செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! 1அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனேகாண் பொருள்; நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார்காண்” என்று அருளிச்செய்தார். 2“ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ - நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மானபங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு? ப்ரபோ - நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே; நீ பரிபவத்தைப் போக்கக்கூடியவனாய் இருக்கச்செய்தே நான் நோவுபடுவதே என்றாளன்றோ. 3தஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன், ‘;எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன, செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து ஓரான் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு

 

1. ‘அது உன் நினைவின் குற்றம்காண்’ என்றது, அதன் கருத்து
  அறியாய்காண் என்றபடி. நீயும் உளையாயிருக்க நான் இங்ஙனே
  இழப்பதே என்று வெறுக்கிறாரித்தனை போக்கி, வேறோர் உபாயம்
  கண்டு தரவேண்டும் என்று கேட்கிறார் அல்லர் என்றபடி.

2. ஆயின், அவனை அங்ஙனம் வெறுத்த பேர் உளரோ? என்ன, உளர்
  என்று அதற்குத் திருஷ்டாந்தமும், திருஷ்டாந்தத்திற்குப் பொருளும்
  அருளிச்செய்கிறார் ‘ஸாஹம்’ என்று தொடங்கி.

  “ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா
   பஸ்யதாம் பாண்டுபுத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”

  என்பது, மஹாபாரதம்.

  கற்றைத் துகில்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன்
  பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
  கொற்றத் தனித்திகிரிக் கோவிந்தா! நீ அன்றி
  அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே.

  என்பது, வில்லிபாரதம்.

3. நான்காவது உபாயம் ஈசுவரன் என்றார் மேல். ஆனால், பிரபத்தியினால்
  காரியம் இல்லையோ? என்கிற சங்கையைப் போக்குவதற்காக ஓர்
  ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘நஞ்சீயர்’ என்று தொடங்கி.