த
திருப்பள்ளியறையிலே
புக்கருளினார். 1திவ்வியமங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம
சொரூப குணங்களும் நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற்போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச்
சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.
ஆ ஆ என்னாது -
2ஈசுவரனுக்குப் பிரியம் செய்கையாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;
நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்கமுடியாத தன்மை வந்ததாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கைவாங்க அமையும்” என்று அருளிச்செய்தார்.
3பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர். ஆனால், பிரதிகூலர்பக்கலிலும்
கிருபையைச் செய்யவோ? என்னில், அப்படியே யன்றோ இவர்களுக்கு மதம். 4‘கெட்ட
வாசனை கழிந்து அநுகூலராகப் பெற்றிலோம்’ என்று இருக்க அன்றோ அடுப்பது. 5அவன்
“இராவணனே யானாலும்” என்றால், அவன்
1. ஆனால், அவர் கேட்டதற்குப்
பரிஹாரம் யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘திவ்வியமங்கள விக்கிரஹமும்’ என்று
தொடங்கி.
என்றது, உபாயம் சித்தமானாலும் ஸ்வீகாரம் வேண்டுகையாலே
முதல்தசையிலே அதிகாரி
விசேஷணமாய், உத்தர உத்தர தசையிலே
பிராப்பியமாயிருக்கும் என்றபடி. திருப்பள்ளி அறையிலே
புக்கதற்குக்
கருத்து, துக்கத்தையுடைய ஒருவன் ஆப்தபந்து உள்ள இடத்திலே
போமாறுபோலே போனார்
என்பது. அன்றிக்கே, இவனுக்கு நல்ல
புத்தியைக் கொடுப்பதற்குப் பிரார்த்திக்கப் போனார் என்னுதலுமாம்.
திருப்பள்ளியறை - பெருமாளது.
2. “ஆஆ என்னாது” என்றது
என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஈசுவரனுக்கு’ என்று தொடங்கி. ஈசுவரனுடைய
பிரீதிக்காக
மாத்திரமன்றிக்கே, பகவத் சம்பந்தம் உண்டாம்போது
“ஆஆ” என்னவேண்டும் என்னுமதனை ஆப்தசம்வாதத்தாலே
காட்டுகிறார் ‘நஞ்சீயர்’ என்று தொடங்கி.
3. ‘பிறர் துக்கத்தைக்
கண்டால்’ என்ற இடத்தில், ‘பிறர்’ என்ற சொல்
யாரைக் குறிக்கிறது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பிறர்
ஆகிறார்’ என்று தொடங்கி.
4. ஆனால், பிராதிகூல்யம்
தங்கியிராதோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கெட்ட வாசனை’ என்று தொடங்கி.
5. பிரதிகூலனுக்கும்
நன்மை உண்டாகவேண்டும் என்று எண்ணுவதற்குக்
காரணம் யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவன்’
என்று தொடங்கி. அவன் - சர்வேசுவரன்.
|