த
தீ வாய் வாளி -
1பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது; படும்போது நெருப்புப் பட்டாற்போலே
இருக்கை. ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற்
போன்று எரிந்துகொண்டு செல்லாநிற்கும். குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. 2“தீப்த
பாவக ஸங்காஸை: - படும்போது நெருப்பைப் போன்றிருக்கும்படி. ஸிதை: 3பட்டமை தெரியாதே
தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை. காஞ்சநபூஷணை: - இவற்றுக்கு 4இருவகைப்பட்ட
ஆகாரம் உண்டாயிருக்கிறபடி. 5“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என்
மனம் தாழ்ந்து நில்லாது” என்கிறபடியே, அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி. நத்வாம்
இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: - இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க,
எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன். 6நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன்
அன்றோ.
1. “தீவாய்” என்பதற்கும்,
“வாளி” என்பதற்கும் பாவம் அருளிச்செய்கிறார்
‘பெருமாள்’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
‘ஸ்ரீகோதண்டத்தில்’ என்று தொடங்கி. ‘குணஹீநம்’ என்றது, சிலேடை:
குணம் - நாணும், குணமும்.
2. “தீ வாய் வாளி” என்பதற்குப்
பிரமாணமும், பிரமாணத்திற்குப்
பொருளும் அருளிச்செய்கிறார் ‘தீப்தபாவக’ என்று தொடங்கி.
“தீப்த பாவக ஸங்காஸை:
ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம்
த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.
இந்தச் சுலோகப்பொருளோடு
கம்பராமாயணம் கும்பகர்ணன்
வதைப்படலம் 18-முதல் 28-முடியவுள்ள செய்யுட்களின் பொருளை ஒப்பு
நோக்கல்
தகும்.
3. கொடுமையின் எல்லையை
அருளிச்செய்கிறார் ‘பட்டமை’ என்று
தொடங்கி.
4. ‘இருவகைப்பட்ட ஆகாரம்’
என்றது, “ஸிதை:” என்கையாலே,
ஆயுதமாயிருக்கும் தன்மையையும் “காஞ்சனபூஷணை:” என்கையாலே,
இனிமையாய்
இருக்கும் தன்மையையும் திருவுள்ளம்பற்றி.
5. இனிமையாய் இருக்கும்
தன்மை யாருக்கு? என்ன, ‘சரங்கள் ஆண்ட’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது
பெரிய
திருமொழி, 7. 3 : 4.
6. “அஹம் ந இச்சாமி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நீ எண்ணி’
என்று தொடங்கி. என்றது, உன்
எண்ணம் எனக்குத் தெரியாது என்றபடி.
|